search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை சஸ்பெண்டு"

    • தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.
    • தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

    நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

    அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.

    தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவியின் முகத்தில் சூடு வைத்ததால் நடவடிக்கை
    • பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

    இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவள், சரிவர படிக்கவில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

    மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை உஷாராணி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
    • மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பெருமாள்புரம், அண்ணா நகர், காமராஜ் நகர், சொக்கார அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் கிருஷ்ணகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அதேபோல் பட்டதாரி ஆசிரியர் 3 பேர், இடைநிலை ஆசிரியர் 5 பேர் என 9 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 8-ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.

    பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வை பார்த்து எழுதுவதாக குற்றம் சாட்டி சமூகவலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மேலாண்மை குழுவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

    தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்யப் போவதாக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி மீது துறை ரீதியான ந டவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் திரும்பி சென்றனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி நேரத்தின் போது உள்ளே வந்து யாரும் செல்போன் எடுக்க கூடாது. அதையும் மீறி சிலர் பள்ளி மேலாண்மை குழு என தெரிவித்து செல்போன் மூலம் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இன்று எங்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் எவ்வளவோ முறை சொல்லியும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இந்த பள்ளிக்கு அவ பெயர் ஏற்படுத்தி உள்ளனர்.

    அதே போல் ஒரு சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிய விஷயமாக மாற்றி வருகின்றனர் என்றனர்.

    ×