search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநோய் தடுப்பூசி"

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கீழச்சீவல்பட்டியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர். இதில் காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராம்குமார், கால்நடை மருத்துவர்கள் பிரதீப், அருண், ஸ்ரீநாத், செல்வநாயகி, ரஞ்சிதா, கால்நடை அலுவலக ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரால் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மருத்துவ ர்கள் கிருபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் இலவச வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை உதவி மருத்துவர் கிருபாகரன் தலைமை வகித்தார்.கால்நடை உதவி மருத்துவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

    தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வெறி நோய் பரவும் முறை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி, அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு கால்நடை உதவி மருத்துவ ர்கள் கிருபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தாமஸ் கலந்து கொண்டார்.

    • ஆலங்குளம் ஒன்றியத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் வழிகாட்டுதலின் படி இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. முகாமினை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி, ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
    • நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் , பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் : 

    கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நடந்தது. முகாமை கலெக்டர் எஸ்.வினீத் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் சிலர் நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் சிலர் பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.

    இந்த முகாமில், நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இதே–போல் 9 தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். இது தவிர இந்த முகாமில் சாதாரண தடுப்பூசி போடுதல், மற்றும் வழக்கமான பல்வகை நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர்(பொறுப்பு)சக்திவேல் பாண்டியன், திருப்பூர் கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வெறிநோயின் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் 100 சதவீத உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாகும். இதில் கொடூர வகை நோய் பாதிப்பு கொண்ட நாய்க்கு உமிழ் நீர் அதிகம் சுரந்து நுரையுடன் வழியும். உணவு உட்கொள்ளாது. கீழ் தாடை தாழ்ந்து வாய்மூட முடியாமல் இருக்கும். நாக்கு தாமிர நிறத்தில் பழுத்த அல்லது கொழுந்து மா இலை போன்றிருக்கும். எதிர்வரும் நபர்கள், விலங்–குகளை கடித்துக்கொண்டே ஓடும்.

    மனிதர்களுக்கு வெறி நாய் கடித்து விட்டால் கடித்த நாளிலிருந்து 3,7,14,28 ஆகிய நாட்களில் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்த உடன் கடிபட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி வழிந்தோடும்படி கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவுதல், டிஞ்சர், அயோடின் பஞ்சில் நனைத்து காயத்தில் வைத்தல் போன்றவைகளை செய்வதன் மூலம் காயத்தில் பரவும் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைக்கலாம். அதற்கடுத்து மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
    • இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோயைத் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை 5-ந்தேதி முதல் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோயினை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    முகாம் நடைபெறும் இடங்கள்: 

    திருப்பூா் பன்முக மருத்துவமனையில் நாளை 5-ந் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் 14 ந் தேதியும் காங்கயம் கால்நடை மருத்துவனையில் 21-ந் தேதியும், தாராபுரம் கால்நடை மருத்துவமனையில் 28-ந் தேதியும், உடுமலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜனவரி 11ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    அதேபோல, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 19 -ந் தேதியும், பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 25 ந் தேதியும், பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் பிப்ரவரி 1 ந் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் பிப்ரவரி 8 ந் தேதியும், தாராபுரம் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15 ந் தேதியும், திருப்பூா் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 22 ந் தேதியும், முத்தூா் கால்நடை மருத்துவனையில் பிப்ரவரி 28 ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    • தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த வகை நோய் தாக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாக, அவற்றின் எச்சில் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது.

    இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமே மனிதர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஆகவே செல்லப்பி ராணிகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு, கட்டாயம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    ஒருவரை நாய் கடித்து விட்டாலோ, நகத்தினால் கீறி விட்டாலோ, கையை கட்டு கட்டவோ, எருகம்பால் விடுவது அல்லது மந்திரி ப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் நீரிலோ அல்லது சோப்பு போட்டோ கழுவ வேண்டும்.

    உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரிடம் கலந்தா லோசித்து தேவைப்பட்டால் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தன்று அனைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் ஒருங்கிணைந்த நலத்தோடு, வெறிநாய் கடிநோயினால் இறப்பு இல்லா சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×