என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை இயேசு"
- இந்த விழா 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- தினமும் குழந்தை ஏசு ஜெபமாலை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
பார்வதிபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். வடசேரி பங்கு அருட்பணியாளர் புரூனோ மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு குழந்தை ஏசு ஜெபமாலை, நவநாள், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 15-ந்தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜோண்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருவிழா நிறைவு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜேக்கப் ஆஸ்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு ஞாயிறு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் அருள் தலைமையில் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
- இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.
பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.
குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.
1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.
குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.
- 1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்டார்
- கண்டன்விளை ஆலயத்தின் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் அன்பளிப்பாக அனுப்பி வைத்தவையாகும்.
கன்னியாகுமரி:
அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன் பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன் விளை.
கண்டன்விளை காரங் காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப் பெரியதாக இருந்த மையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண் டுமென விரும்பிய அருட்தந்தை இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழா வில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப் பப்படும் ஆலயம் சிறு மலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4 1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப் பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணி களில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமல ருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப் பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங் களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும். திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள் ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங் குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோத ரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப் பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றால யம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உரு வாக்கப்பட்டுள்ளன.
1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந் தோறும் வியாழக் கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத் தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள் ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரு கிறது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற் றுகிறார். கருமாத்தூர் குருமட தேவராஜ் அருளுரை யாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்று கிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறை வேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங் கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்ப லியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியா ளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலை யாள திருப்பலியை நிறை வேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக் கிறது.
இதற்கான ஏற்பாடு களை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்த லைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலா ளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
- இன்று இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
- நாளை திருக்கொடி இறக்கம் நடக்கிறது.
அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன்பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன்விளை.
கண்டன்விளை காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப்பெரியதாக இருந்தமையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென விரும்பிய அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
புனித குழந்தை இயேசுவின் தெரசா
1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் சிறுமலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4-1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப்பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணிகளில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங்களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும்.
திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள்ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோதரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப்பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றாலயம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.
நூற்றாண்டு விழா
1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தேர்ப்பவனி
விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். கருமாத்தூர் குருமட அதிபர் தேவராஜ் அருளுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
திருவிழா சிறப்பு திருப்பலி
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலையாள திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்தலைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
- மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.
கன்னியாகுமரி :
திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு பங்கு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு, மாலை 5 மணிக்கு கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். 2-ந்தேதி காலை 7 மணிக்கு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் ெஜரால்டு ஜெஸ்டின் தலைமையில் மறைக்கல்வி மன்ற சிறப்புத் திருப்பலி நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது. 8-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.
விழாவின் இறுதி நாளான 9-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலி, 10 மணிக்கு மலை யாளத்திருப்பலி, 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை வெ.சகாயஜஸ் டஸ், இணைப் பங்குதந்தை ரா.சத்தியநாதன், பங்கு இறை மக்கள், அருட்பணிப் பேர வையினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்