search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகன்"

    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    • ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது.
    • பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பழைய பஸ்தி பாக் பகுதியில் நேரு வன உயிரியல் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த ஷைபாஸ் (வயது 25) என்ற வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக வனவிலங்கு பராமரிப்பாளராகவும் யானை பாகனாகவும் வேலை செய்து வந்தார்.

    நேற்று மீராளம் குளம் என்ற இடத்தில் யானைகளை பராமரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது விஜய் என்ற ஆண் யானை திடீரென ஷைபாசை தந்ததால் குத்தி தூக்கி வீசியது. மேலும் ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷைபாஸ் அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து ஷைபாஸை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஷைபாஸ் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். யானை தாக்கியதில் வனவிலங்கு பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
    • இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

    புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

    இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு வந்தபோது நடந்தது
    • செல்போனில் வைரலாக பரவும் காட்சியால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக் குரிய புனித நீர் விவேகா னந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து எடுத்து வரப்படுகிறது.

    புனித நீர் வெள்ளிக்கு டத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவ ராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக் கப்படும் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைர லாக பரவி கொண்டி ருக்கிறது.

    இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×