search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோத செயல்"

    • குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதலே இவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை இவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே கைதான இவர், ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வசூலித்து வந்துள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.

    முருகேசன் என்பவர் மருத்துவர் இல்லை என்றும் இவருக்கு கீழ் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
    • ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

    உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

    நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

    மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சியில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர் மீதும், 2021-ல் 85 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதே நேரம் இந்த 9 மாதங்களில் மட்டும் 142 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த 170 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 115 பேர் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1,124 பேர் மீதும் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9,857 பேர் மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் வழிப்பறி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ளது.

    ×