search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு வியாபாரி"

    • கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். 55 வயதான இவர் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது மனைவி யமுனா. 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். சாய் சுவாதி 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யு.கே.ஜி. படித்து வந்தான்.

    மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மோகன் குழந்தைகளோடு வீட்டில் இருந்தார். மனைவி யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு

    உள்ளது. இதனை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

    இந்த விவகாரம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் யமுனா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், வேறு ஒருவருடனான தொடர்பை மனைவி கைவிட மறுக்கிறாளே என்கிற வேதனையில் இருந்தார்.

    இதை தொடர்ந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மனதை கல்லாக்கிய மோகன் மகள் சாய் சுவாதியின் கழுத்தை அறுத்தார். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானாள்.

    இதைத் தொடர்ந்து தனது 5 வயது மகன் தேஜசையும், மோகன் ஈவு இரக்கமின்றி கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

    வேலை முடிந்து யமுனா மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியில் இருந்து கணவர் மற்றும் குழந்தைகளை யமுனா கூப்பிட்டு பார்த்தார். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கே அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் தூக்கில் தொடங்கியதையும், குழந்தைகள் இறந்து கிடப்பதையும் பார்த்து யமுனா கதறி அழுதார். இதுபற்றி குமரன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அமுதா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்களும் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் யமுனாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

    மோகனுக்கும் யமுனாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றுள்ளது. முதலில் பெண் குழந்தை பிறந்த பின்னர் 2-வதாக 8 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகள் மீதும் மோகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். மனைவி யமுனாவின் தவறான தொடர்பால் மனமுடைந்த அவர் பின்னர் குழந்தைகளுக்காகவே வாழ தொடங்கியுள்ளார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.

    பின்னர் மோகன், மனைவியோடு வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 2 மாதங்களாக மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்துள்ளனர். இதன் பிறகும் யமுனா கள்ளக் காதலை கைவிடாததால் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள மோகன் முடிவு செய்தார். மனைவி தவறான பழக்கத்தில் இருப்பதால் குழந்தைகள் அனாதையாகி விடுமோ என அஞ்சியே அவர்களை கொன்றுள்ளார்.

    ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் நிலையில் அங்கு யமுனாவின் வீட்டாரும், மோகனின் வீட்டாரும் குவிந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர். இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    • கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது.
    • பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி.

    இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது. இதனை வழக்கமாக கொள்முதல் செய்யும் நிறுவனம் என நம்பி இமெயிலில் தெரிவித்திருந்த கல்ப் ஸ்டீல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அபுதாபி பெயரிலான போலி நிறுவன வங்கி கணக்குக்கு 71.93 லட்சம் ரூபாயை செலுத்தினார்.

    பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து அவர் விசாரித்தபோது தான் போலி இமெயில் மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். தொடர்ந்து அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டது அபுதாபி நிறுவனமா? அல்லது வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? என்பது குறித்து அந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரும்பு வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்்ந்தவர் சேரிப்பழம்(53), பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு சிவகாசியை சேர்ந்த வசந்த் என்ற வியாபாரி அறிமுகமாகி உள்ளார். அவர் பழைய இரும்பை ஏலம் எடுத்து தருவதாகவும், அதற்கு ரூ.2½ செலவாகும் என்றும் சேரிப்பழத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதை நம்பிய அவர் கூகுள்-பே மூலம் வசந்திற்கு ரூ.2½ லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வசந்த் பழைய இரும்பை ஏலம் எடுத்து தரவில்லை. ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சேரிப்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வசந்த் மற்றும் சென்னையை சேர்ந்த சொர்ணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்,
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம், தேவகியம்மாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 38 ) இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு முருகேஸ்வரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வெங்கடேசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது . சண்டையிடும் போதெல்லாம் நான் தூக்கு மாட்டி அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    அதன்படி சம்பவத்தன்று வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் வாயில் நுரையுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×