search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் புகார்"

    • காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்
    • தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டதால் கண்டுபிடித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.

    போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்பதும், இவர் கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

    பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    • காங்கமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • காங்கமுத்துவின் அண்ணன் முனியன் என்பவர், மங்களபுரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே உள்ள வேம்பாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் காங்கமுத்து (வயது 39). இவர் அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு நேரங்களில் கால்நடைகளுக்கு ஊசி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில், தனக்கு அல்சர் இருப்பதாகவும் வயிறு வலிப்பதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு திம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவரது நண்பரான ஹோமியோபதி டாக்டர் சக்திவேல் என்பவரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது அவருக்கு டாக்டர் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் காங்கமுத்துவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காங்கமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காங்கமுத்துவை சேர்த்தனர். அங்கும் அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து காங்கமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே காங்கமுத்து சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் காங்கமுத்துவின் அண்ணன் முனியன் என்பவர், மங்களபுரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    அதன் பேரில் மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் காங்கமுத்து எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த காங்கமுத்துவுக்கு மஞ்சு (25) என்ற மனைவியும், கவிநிலா (4) என்ற மகளும் உள்ளனர்.

    • நர்சுகளே மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
    • மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி மித்ரா(வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அலமாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்த நர்சுகளே, மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. மேலும் தாய்க்கும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மித்ராவின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகளே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து விட்டதாக சோழவரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×