என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தளம்"
- ஆற்றுப் பாலத்தில் அதிக மது போதையில் நடந்து சென்றுள்ளார்
- எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி :
புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடி யிருப்பை சேர்ந்தவர் முருகையா (வயது 54). போர்வெல் தொழிலாளி.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதற்கிடை யில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன விரக்தியில் இருந்த முருகையா, கடந்த 17-ந்தேதி பெத்த பெருமாள் குடியிருப்பு ஆற்றுப் பாலத்தில் அதிக மது போதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முருகையா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர் சுபலிங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- சுசீந்திரம் போலீசார் 5 பிரிவுகளில் நிஜித் மற்றும் மகேஷ் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள அரியபெருமாள்விளை காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நிஜித் (25) மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருடன் கட்டிட வேலைக்கு சென்றனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்குதல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுரேஷ் இரவு 8.30 மணி அளவில் தனது மனைவி கவிதாவுடன் அப்பகுதியில் உள்ள கடைக்கு வரும்போது நிஜித் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து சுரேசை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி, நிஜித் கையில் வைத்திருந்த கம்பியால் சுரேசை தாக்கினார்.பின்னர் 2 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
படுகாயம் அடைந்த சுரேசை அவருடைய மனைவி கவிதா மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், 5 பிரிவுகளில் நிஜித் மற்றும் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 5 மாதங்கள் உப்பு உற்பத்தி பணி
- உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே புத்தளம், மேலப்புத்தளம், கல்விளை, ஆண்டிவிளை, சுவாமிதோப்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான உப்பு உற்பத்தியாளர்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 5 மாதங்கள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபடுவார்கள். அப்போது இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படும்.
அதன்படி இந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்காக நிலத்தினை தயார் செய்து உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது அப்பகுதியில் உப்பு விளைந்து உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் விற்பனைக்காக வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
- இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது 63).
இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி மூத்த மனைவியின் தங்கையாகும்.இரண்டாவது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் கமலன் மன வேதனையில் இருந்து வந்தார். இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது மூத்த மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கமலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இந்து முன்னணி நிர்வாகி கைது
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 35).
புத்தளம் அருகே உள்ள வீரபாகுபதியில் ஜெபசிங் கிறிஸ்தவ கூட்டம் நடத்தினார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அங்கு சென்ற சிலர், ஜெபசிங்கை தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தனர்.
இதுபற்றி ஜெபசிங், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் கிறிஸ்தவ கூட்டம் நடக்கும் போது அரியப ெருமாள்விளையை சேர்ந்த சுரேஷ், மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15- வது வார்டு உறுப்பினர் வீரபாகுபதியை சேர்ந்த விஜயகல்யாணி, கண்ணன், ஜெகன், தெற்கு புத்தளத்தை சேர்ந்த மகாலிங்கம், உசர விளையை சேர்ந்த சுடலைமணி என்ற மணி, ராமு, ஆகிய 8 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் 8 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரிய பெருமாள் விளையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்