என் மலர்
நீங்கள் தேடியது "Prizes"
- பலூன் உடைத்தல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
- போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று29-ந்தேதி மதுக்கூர் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டி ஏற்பாடு களை வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா, பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் புஷ்பா, இருதயராஜ், பழனிவேல் ஆகியோர் செய்தனர்.
- போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
- தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும்.
அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.
தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.
தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் காந்தி கிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கி பேசியதாவது:- தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். மற்ற துறைகளை விட பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
எதிர்கால தமிழகத்தை வழிநடத்த கூடியவர்களாக, மாணவ, மாணவியர் இருப்பார்கள் என பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மூன்றாவது மண்டல குழு தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும் கரூர் காமராஜ் தினசரி மார்கெட்டின், புதிய கட்டிட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் காமராஜ் தினசரி மார்கெட் வணிக வளாகத்தில் 174 கடைகள் வர உள்ளன. அதில், தரைத்தள பணிகள் ஆறு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, வரும் ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். பின்னர் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல் தள பணிகள் தொடங்கும். மீன் மார்கெட்டுக்கு என தனியாக ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் விரைவில் கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தண்ணீர் நிரப்புதல், சைக்கிள் ரேஸ், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயமும் நடைபெற்றது.
- 1 முதல் 4 இடம் பிடித்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பேராவூரணி ஆவணம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சிங்கப்பூர் தொழிலதிபர் செல்வராசு, தென்னங்குடி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் மற்றும் பொன்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெரிய மாடு பந்தயத்தில் 14 வண்டிகள், நடு மாடு பந்தயத்தில் 19, பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 47 வண்டிகள் பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் 12 குதிரை வண்டிகள் ஓடியது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றது.
போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம், நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடி பரிசாக ஆட்டு கிடா, செல்போன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை தனவேந்தன் ஒருங்கிணைத்தார்.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.
- 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
- சோழன்குறிச்சி வல்லரசு முதலிடம் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ் பல்கலை கழகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியைத் துணைவேந்தா் திருவள்ளு வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதில், 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இவா்களில் சோழன்கு றிச்சி வல்லரசு முதலிடமும், ஏலாக்குறிச்சி சதீஷ்குமாா் இரண்டாமிடமும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை மாணவா் தவக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.
இவா்களுக்கு பதிவாளா் (பொ) தியாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துவாரா கே.ஜி.எப்.எஸ். மண்டலத் தலைவா் மணிராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பல்கலை க்கழக மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் வரவேற்றாா்.
முடிவில் நிறுவன வா்த்தகப் பிரிவு தலைவா் சிவா நன்றி கூறினாா்.
- சூரியனை சுற்றி வரும் கோள்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.
- அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வடக்கு நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றத்தை சேர்ந்த கலைச்செல்வன் விண்வெளி அறிவியல், தொலைநோக்கி அறிவியல், ராக்கெட் ஏவுதல் குறித்தும் சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
அறிவியல் வினாடி வினா நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் என்.திருஞானம், கே.கலியமூர்த்தி, தனு.முருகேசன், உஷாதேவி, வேளாங்கண்ணி ஞானதிரவியம், கரோலின் ஆரோக்கியமேரி, தாமரைச்செல்வி, மகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
- ஆட்டோ டிரைவர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
உலக ரெட்கிராஸ் தினத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கடந்த ஆண்டு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ பவுண்டேஷன், ஆர்கிடெக் அருண் பாலாஜி, துணை இயக்குனர் சுகாதாரம் டாக்டர் நமச்சிவாயம், பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் வேல்முருகன், மத்திய மருந்து ஆய்வாளர் கவியரசன், முதல் நிலை மருந்து ஆய்வாளர் சுபத்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், இன்ஸ்பெக்டர் சந்திரா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)டாக்டர் சுகபுத்ரா, ரெட்கிராஸ் கொடியினை ஏற்றி வைத்து, ரெட்கிராஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஜீன்ஹென்றிடூனாந் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.
உலக ரெட்கிராஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித் திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் மாணவர்களிடம் ரெட்கிராஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ரெட்கிராஸ் வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோரும், அரசு ராசாமிராசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி மையத்தில் பராமரிப்பில் உள்ள மனநலம் குன்றிய நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் டாக்டர். ராதிகா மைக்கேல், டாக்டர். சிங்காரவேலு, டாக்டர். தமிழரசன், ஜெயக்குமார், அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பாபு, கோவி மோகன், முனைவர் பிரகதீஷ், ஜான்ஸ்டீபன், செல்வராணி, பயோகேர் முத்துக்குமார், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், ரெட்கிராஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.
- ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
- தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி:
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.
- வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
- வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.
நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.
- இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.
போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
- திட்டச்சேரி அரசு பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 62-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்குழலி தலைமை தாங்கினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆனந்த், செயின்ட் மைக்கேல் அகாடமி தலைவர் ஆல்பிரட் ஜான்,பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஜெயினுல் ஆபிதீன்,முகமது ஷெரீப், அப்துல் நாசர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி வளர்ச்சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.