என் மலர்
நீங்கள் தேடியது "கணவர் தற்கொலை"
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 77). இவரது மனைவி லிங்கம்மாள். கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்ேபாது முதல் மன வேதனையில் இருந்த சின்னச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் முத்துச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
- சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (வயது60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார்.
மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
- அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் மாரப்பகவுண்டர் (82). விவசாயி.
கடந்த 1½ வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். அன்று முதல் சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு சத்திமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரப்ப கவுண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூரை அடுத்த வெங்கடாம் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). விவசாயி. கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது மனைவி மகேஸ்வரி சக்திவேலை திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
- செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.
பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.
இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.
ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அறையில் அருளானந்தம் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.
- இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (45). இவர் அப்பகுதியில் உள்ள டையிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அருளானந்தத்தின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அருளானந்தம் தனது குழந்தைகள் மற்றும் தாய் தெரசாமேரி (68), தம்பி ஜெயசீலன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட அருளானந்ததுக்கு அவரது தாய், தம்பி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அருளானந்தத்தின் மகன் கண் விழித்து பார்த்த போது வீட்டினுள் உள்ள அறையில் அருளானந்தம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருளானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார்.
- நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொளத்தூர்:
கொளத்தூர் அடுத்த வெற்றி நகர் ஜெகதீசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது26). இவர் ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சன்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
மணிகண்டனுக்கும் அவரது மனைவி சன்மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சன்மதி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.
- கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பண்ட அள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராணியை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.
- வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்:
வியாசர்பாடி, முல்லைநகர், 82-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (வயது27). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பவித்ரா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனால் வெள்ளை பிரகாஷ் மகிழ்ச்சியுடன் இருந்தார். கடந்த சில நாட்களாக பவித்ராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பரிசோதனைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் இறந்த குழந்தையை அகற்றினர். இதனால் வெள்ளை பிரகாஷ் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது.
- மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 6-வது வார்டு அம்பலகாரர்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெய சுருதி என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது. சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தை யைமாமனார் வீட்டில் இறக்கிவிட்டு சென்ற பிரபாகரன் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். இதனால் அவரது மனைவி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறினார். மனமுடைந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
- மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது30). சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
வேடசந்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.