search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யாரம்பம் நிகழ்ச்சி"

    • விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
    • பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ நிலையங்கள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திலும் ஆயுத பூஜை விழா விமர்சையாக நடந்தது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.

    நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

    இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுப்பார்கள். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களில் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன.

    பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அங்கு தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத வைத்தனர். தங்க ஊசியால் குழந்தையின் நாக்கில் அ எழுதப்பட்டது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரசுவதி சன்னிதானத்தில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துக்களை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    இங்கு அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர். வழக்கமாக கேரளாவில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருவார்கள். கேரளாவில் நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவதால் கேரளாவை சேர்ந்தவர்கள் வருகை குறைவாக இருந்தது. இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    இதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் கோவிலிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

    தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தைகளுக்கு எழுத்தறிவு சொல்லிக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி, எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர்.
    • நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்., மேட்டுக்கடை பஸ் நிலையம் அருகே அன்னை கார்டனில் உள்ள அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு மாணவர்களுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர் இரா.அம்சமுத்து, குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை எல்.கே.ஜி. அசிரியருடன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு நோட்டு- புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகளை வழங்கினர். நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

    சேலம்:

    நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது .

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தொடர்ந்து காலை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதே போல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்களுக்கு கையை பிடித்து வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்தது. அரசு பள்ளிகளில் கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். 

    • அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
    • விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    போரூர்:

    விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெற்றது.

    கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக குவிந்து இருந்தனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 2 ½ வயது முதல் 3½வயது வரை உள்ள மழலை குழந்தைககள் பெற்றோரின் மடியில் அமரவைக்கப்பட்டு நெல் மற்றும் அரிசியில் "அ" எழுத்தை எழுதி கல்வியை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தாலும் எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக அய்யப்பன் கோவிலில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    வடபழனி கோவிலில் காலை 7.30மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீ மகாவல்லப கணபதி கோவிலில் வித்யா ரம்பம் நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

    • விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
    • அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.

    அரவேணு

    கோத்தகிரி உள்ள கோவில்களில் நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

    • குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.
    • 205 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்டனர்.

    தருமபுரி, 

    தருமபுரி கேரள சமாஜத்தின் 21 -வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா இன்று புதன்கிழமை விஜயதசமி அன்று ஹோட்டல் ஸ்ரீ ராமா சுந்தர மகால் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வினை கேரள சமாஜத்தின் தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் சத்திய நாராயணன் முன்னிலையில் விழா தொடங்கியது. இதில் சமாஜ செயலாளர் ஹரிகுமார், வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கேரளா மாநிலம் கண்ணூர் விஷ்ணு நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்த பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

    இவ்விழாவில் 205 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சிலேட்டு, பென்சில், பல்பம், ரப்பர், ஷார்பனர், சிறிய வேட்டி, மற்றும் ஏபிசிடி புத்தகம் ஆகியவை சடங்கில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

    ×