search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide by hanging தூக்குப் போட்டு தற்கொலை"

    • சொத்து தகராறில் நடந்த இரட்டை கொலை வழக்கில், ஏற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கனகராஜ், இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கோடம்பாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கனகராஜ் (வயது 27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஏற்காடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொத்து தகராறில் நடந்த இரட்டை கொலை வழக்கில், ஏற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜாமீனில் வெளியில் வந்த கனகராஜ், செவ்வாய்ப்பேட்டையில் வசித்து வந்தார். இதனிடையே சுமை தூக்கும் தொழிலாளி மகேஸ்வரன்(32) என்பவர் மனைவி ரஞ்சிதாவுடன் (28) கனகராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஞ்சிதாவுடன் நெத்திமேடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சிதாவிற்கும், கனகராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கனகராஜ், இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கனகராஜ் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியிலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறொரு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மிகுந்த வேதனையில் இருந்த வீரப்பன், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறொரு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் வீரப்பன் மனமுடைந்து விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் தனது மகளை வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர், தந்தையுடன் வர மறுத்துவிட்டார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த வீரப்பன், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது விட்டதில் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டார்.

    இதை பார்த்த உறவினர்கள், பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதல் மனைவி பொன்னம்மாளுடன்‌ ஏற்றப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பழனிச்சாமி 2-வது மனைவி சாந்தியுடன் வாழ்ந்து வந்தார்.
    • இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கோனூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.

    இவரது முதல் மனைவி பொன்னம்மாள். 2-வது மனைவி சாந்தி (வயது 55). முதல் மனைவி பொன்னம்மாளுக்கு ஒரு மகனும், 2-வது மனைவி சாந்திக்கு ஒரு மகனும் உள்ளனர்.

    முதல் மனைவி பொன்னம்மாளுடன்‌ ஏற்றப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பழனிச்சாமி 2-வது மனைவி சாந்தியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். கணவன் இறந்ததால், கடந்த சில மாதங்களாகவே சாந்தி மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தி வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது, சாந்தி சேலையால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே காளிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
    • மனிஷா கவுடே தங்கி இருந்த வீட்டின் கழிவறையில், துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்கோ டா பகுதியைச் சேர்ந்தவர் சந்துராம் கவுடே. இவரது மகள் மனிஷா கவுடே (வயது 18).இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே காளிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மனிஷா கவுடே வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அவருடன் வேலை பார்த்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மனிஷா கவுடே தங்கி இருந்த வீட்டின் கழிவறையில், துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் மனிஷா கவுடேவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று வீட்டில் தனியாக இருந்த கார்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்தி ( வயது 21). இவர் சில பிரச்சினைகள் காரணமாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கார்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு கதறி அழுதனர். உடனடியாக கார்த்திகை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து முருகேசன் பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×