search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியா"

    • கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • கரென்ஸ் எம்பிவி மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    கியா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் கரென்ஸ் எம்பிவி மாடலை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், தென் கொரிய நாட்டில் சோதனை செய்யப்படும் கியா கரென்ஸ் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. புதிய கரென்ஸ் எம்பிவி மாடல் கிரெட்டா EV வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    கரென்ஸ் எம்பிவி எலெக்ட்ரிக் மாடல் ப்ரோடோடைப் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். கரென்ஸ் EV மாடல் தோற்றத்தில் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் கரென்ஸ் எம்பிவி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் என்பதால், இந்த மாடலில் ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    முழுமையான எலெக்ட்ரிக் கியா கரென்ஸ் மாடல் முற்றிலும் பிரத்யகேமான எலெக்ட்ரிக் வாகன டிசைன் அம்சங்களான அலாய் வீல்கள் மற்றும் இதர ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கரென்ஸ் EV மாடலின் பேட்டரி மற்றும் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த கார் கிரெட்டா EV மாடலை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்ட கிரெட்டா EV மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரென்ஸ் எம்பிவி மாடல் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கரென்ஸ் EV மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரென்ஸ் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: newcarscoops

    • கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட EV9 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் லெவல் 3 ADAS அம்சங்களை கொண்டுள்ளது.
    • புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 541 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது இரண்டாவது பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனம், கியா EV9 மாடலை அறிமுகம் செய்தது. இது மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் வாகனமும் E-GMP பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் இது கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.

    கியா EV9 மாடலில் யுனைடெட் டிசைன் மற்றும் கியாவின் பாரம்பரியம் மிக்க டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பாடி நிறத்தின் பின் டிஜிட்டல் லைட் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி நீண்ட வீல்பேஸ், குறைந்த ஓவர்ஹேங்குகளை கொண்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. காரில் கூர்மையான லைன்கள் மற்றும் ஃபெண்டர் ஃபிளேர்கள் வெளிப்புற ஹைலைட்களில் ஒன்றாக உள்ளன.

     

    உள்புறம் கட்டாயம் இருக்க வேண்டிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அம்சம் பெறும் முதல் கியா கார் என்ற பெருமையை கியா EV9 பெற்றுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேவில் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில் சீரான தரை மற்றும் சுழலும் வகையான இருக்கைகள் உள்ளன.

    இதனால் பின்புற இருக்கையில் அமர்வோர் ஒவ்வொருத்தர் முகத்தை பார்த்த நிலையில் அமர்ந்து கொள்ள முடியும். இதுதவிர 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்டீரிங் வீல் டேபிள், ரிலாக்சேஷன் இருக்கைகள், டிராயர் போன்று திறக்கக்கூடிய கன்சோல் உள்ளன. இத்துடன் லெவல் 3 ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் கியா கார் EV9 ஆகும்.

     

    இதில் உள்ள 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். இத்துடன் 800 வோல்ட் சார்ஜர் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 239 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் ஆல் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் மாடல் அதிகபட்சம் 283 கிலோவாட் மற்றும் 600 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யுவியில் மேம்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ டெரைன் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் கியா EV9 முன்பதிவு கொரியாவில் துவங்கவுள்ளது. பின் 2023 இறுதியில் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய சந்தைகளில் கியா EV9 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் கியா EV9 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
    • கியா EV9 மாடலில் வழங்கப்படும் மோட்டார் 250 முதல் 300 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கியா நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கியா எலெக்ட்ரிக் கார் இம்மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியா EV9 மாடல் பிரத்யேக எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படுகிறது.

    தற்போது கியா வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புதிய EV9 மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என்றும் இது மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யுவி என்பதும் தெரியவந்தள்ளது. டீசரின் படி கான்செப்டில் இருப்பதை போன்று பிரத்யேக எல்இடி ஹெட்லேம்ப், மெல்லிய, செங்குத்தாக எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

     

    கான்செப்ட் மாடலுடன் ஒப்பிடும் போது கியா EV9 ப்ரோடக்ஷன் வெர்ஷனில் சிறிய 20 அல்லது 21 இன்ச் வீல்கள், ORVM-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியா EV9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் 250 முதல் 300 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம்.

    இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் ஒற்றை மோட்டார் செட்டப், GT வெர்ஷனில் டூயல் மோட்டார் AWD டிரைவ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    கியா EV9 எலெக்ட்ரிக் கார் சர்வதேச வெளியீடு இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் விற்பனை ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய கியா EV9 மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    • கியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய எதிர்கால திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
    • இத்துடன் புதிய எலெக்ட்ரிக் கார் விலை விவரங்களையும் கியா வெளியிட்டு உள்ளது.

    கியா நிறுவனம் பிரிட்டனில் 2023 சோல் எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. 2021 ஆண்டு சோல் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகரித்து இருந்தது. தற்போது இதனை மேலும் அதிகபடுத்த கியா நிறுவனம் மேம்பட்ட சோல் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    முதல் முறையாக புதிய "அர்பன்" அம்சங்கள் "எக்ஸ்ப்ளோர்" கிரேடுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் மீடியம் ரேன்ஜ் பேட்டரியும் அடங்கும். பிரிட்டனில் புதிய சோல் மாடல்களினி வினியோகம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது. புதிய சோல் மாடல் அர்பன் கிரேடு மற்றும் மீடியம் ரேன்ஜ் பேட்டரி மாடல் விலை 32 ஆயிரத்து 795 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்து 82 ஆயிரத்து 117 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கியா சோல் எக்ஸ்ப்ளோர் மற்றும் லாங் ரேன்ஜ் பேட்டரி பேக் விலை 38 ஆயிரத்து 995 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சத்து 45 ஆயிரத்து 896 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கியா நிறுவனத்தின் சிறிய கார் ஆகும். இத்துடன் நிரோ மற்றும் EV6 பிளாக்‌ஷிப் மாடல்களை கியா விற்பனை செய்து வருகிறது.

    2023 வாக்கில் கியா EV9 மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் ட்ரியோ பெயரில் அறிமுகமாகும். இது பெரிய பேட்டரி கொண்ட கியா மாடலாக இருக்கும் என தெரிகிறது. 2027 வாக்கில் உலகம் முழுக்க 14 புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. இதில் பத்து மாடல்கள் புதிய எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் (e-GMP) ஆர்கிடெக்சரில் உருவாகிறது. மற்ற மாடல்கள் ஏற்கனவே விற்பனையாகும் கார்களை தழுவி உருவாக்கப்படுகிறது.

    • கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • எம்பிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் விலை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. கேரன்ஸ் எம்பிவி மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் (Air Bag Control module) பிழை கண்டறியப்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் என கியா தெரிவித்து இருக்கிறது. இந்த பிழை காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை கியா வெளியிடவில்லை.

    எனினும், கேரன்ஸ் காரில் ஏற்பட்டு இருக்கும் பிழை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கியா தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

    இது மட்டுமின்றி கேரன்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் டீலர்களை தொடர்பு கொண்டும் காரில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது கியா செயலி மூலமாகவும் தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ×