என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராயணம்"
- ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்
- ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ராமலிங்க அடிகளார் 23.5.1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ந் தேதியன்று சத்திய ஞானசபையை நிறுவினார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 158-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. தொடர்ந்து தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6-ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜீவகாருண்யத்தை பறைசாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சத்திய தரும சாலையானது பலரது சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என்பதால், ஜீவதயவுடைய புண்ணியர்கள் பொருள் முதலியன உதவி செய்து அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் கூற்று.
அன்று முதல் சத்திய தரும சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்று நேரத்திலும் கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வழிபடுங்கள்.
- இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும்.
மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரை பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களை எல்லாம் வெற்றியாக்கி தந்தருள்வார் பைரவர்.
பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கி தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.
குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.
பைரவாஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே
பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே
கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்
இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.
- பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும்.
- அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.
இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள்.
நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம். வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம்.
அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
முழு நில வதனில் முறையடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
- பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
- பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.
அவிநாசி :
அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டியும் 10,008 முறை அவிநாசி பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சிவாச்சாரியாா் ஆரூா் சுப்பிரமணியம், சிவன்மலை சந்திரசேகரன் ,பழனி ,விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.
- கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர்.
- காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனை நடைபெற உள்ளது.
அவினாசி :
அவினாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ந் தேதி கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர்.இது இறைவனின் செயலோ என்று பக்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பொக்கொளியூர் எனப்படும் அவிநாசியில் சிவபெருமான் பல்வேறு திருவிளையாடல் நிகழ்த்தியிருக்கிறார். முதலை உண்ட பாலனை மீட்டுத்தந்த இறைவன் தற்போதைய அசம்பாவிதங்களையும், சங்கடங்களையும், சாஸ்திர விதிமீறல்களையும் நிச்சயம் நீக்கிக்கொடுப்பார் என சிவனடியார்களும், சிவாச்சார்யார்களும் நம்புகின்றனர்.
அந்த வகையில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் வருகிற 11ந் தேதி சிறப்பு வழிபாடும், அவிநாசியம்பதியில் நம்பி ஆரூரர் அருளிய அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்து விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் கூறுகையில், வரும் 11ந் தேதி காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனையும், அதனை தொடர்ந்து அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து எட்டு முறை பாராயணம் செய்யும் நிகழ்வும் நடைபெற உள்ளது. காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புண்ணிய கைங்கர்யத்தில் அனைத்து பக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று அனைத்துவித இன்னல்கள் நீங்கவும், விரைவில் கும்பாபிேஷக விழா நடைபெறவும் வேண்டி அவிநாசி பதிகம் பாடி இறையருள்பெறலாம் என்றார்.
- லலிதா சகஸ்ரநாம பாராயணம் நாளை நடக்கிறது.
- மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள்.
மதுரை
மதுரை கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வர சுவாமியின் ஆசீர்வாதத்தால் கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு மதுரையில் இன்று (22-ந் தேதி) மற்றும் நாளை (23-ந் தேதி)களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை லோக சேமத்திற்காகவும், நம்மை சுற்றியுள்ள துர் சக்திகள் நீங்கி நல்ல வளத்தோடு அனைவரும் வாழ வேண்டியும், சென்னை கற்பகவல்லி நவகோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழுவால் பாராயணம் நடத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கற்பகாம்பாளுடன் 70 பேரும், மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
- 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அவிநாசி :
அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.
- அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
- கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
உயர்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை தொடங்கிய 152-வது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இந்த உலகிற்கு வருவிக்க உள்ள 200-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து முப்பெரும் விழா தமிழக அரசின், உத்தரவுப்படி இன்று தஞ்சையில் நடைபெற்றது.
அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. அகல் விளக்கை டாக்டர் தம்பையா ஏற்றினார். பின்னர் மாநில சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம், சமரச சித்த சன்மார்க்க சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் சன்மார்க்கக் கொடி கட்டினர் . அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சன்மார்க்க பெரியோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளலார் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் சூரிய நாராயணன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ( வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பரிசு வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து சன்மார்க்க பெரியோர்கள் கௌரவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்