search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு கொலை வழக்கு"

    • முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
    • கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

    கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட தனது பணியாளர்களுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சஞ்சீவன் சேர்க்கப்பட்டதால் கடந்த ஏப்ரலில் அவர் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவானார்.

    • கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
    • இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019-ல் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவும், வீடியோ வெளியிடவும் தடை விதிக்கும்படியும், ரூ.1.10 கோடி இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜனவரி 30 மற்றும் 31ல் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்ததை எதிர்த்த மேத்யூ சாமுவேலின் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
    • பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.

    இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

    அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    • தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
    • கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனக ராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.

    கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பற்றி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

    • ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். தனது தம்பி உயிரிழக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவங்கள் கொடநாடு வழக்கில் திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.

    இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருக்கும் மனு செப்டம்பர் 19-ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து தனபாலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து அரசு தரப்பு வழக்கில் ஆனந்த் கூறுகையில் கனராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    • கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தொடங்கினர்.

    முதற்கட்டமாக நேற்று சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் 1500 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள், வாக்குமூல விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்தநிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விட்டு இன்னும் ஒரு சில தினங்களில் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டும் என தெரிகிறது.

    ×