என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாடப்புத்தகங்கள்"
- 281 பள்ளிகளில், 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்றனர்.
- மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகபைகள் அனுப்பும் பணியும் ஓரிரு நாளில் தொடங்கும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள, 172 பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 109 பள்ளிகள் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள, 281 பள்ளிகளில், 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்றனர். இவர்களுக்கான பள்ளி பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வந்துள்ளன. பள்ளி பாட புத்தகங்களை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் வரத் தொடங்கி மே முதல் வாரத்தில் முழுவதுமாக வந்து விட்டன. அவற்றை கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மே 13-ந் தேதி முதல் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.
அதே போல் புத்தகப்பை கடந்த மேல், 30-ந் தேதி 13 ஆயிரமும், இன்று 10,880 புத்தகபைகளும் வந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற புத்தகப்பைகளும் வந்துவிடும். அதன் பின்னர், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தக பைகள் வாகனங்கள் மூலம் அனுப்பப்படும். அதேபோல மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகபைகள் அனுப்பும் பணியும் ஓரிரு நாளில் தொடங்கும். அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 7-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாட புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையும், 5-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதையொட்டி பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேதமடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக்கேணி பகுதிகளில் நடந்து வருகிறது.
அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் பள்ளிகள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள குடோனில் பெற்றுச் செல்கின்றன.
- அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
- அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனை மலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகாக்களில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்கள் உள்ளன.
இங்கு கடந்த மாதம் 23-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடந்தது. அதன்பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், நகராட்சி, சுயநிதி பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடங்கள் உள்ளன.
இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடப்புத்தகங்களுமான புதிய பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்து உள்ளன. அவை கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க- நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
- பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை
வேலுார்:
கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ந் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதியும் வகுப்பு கள் தொடங்க உள்ளன.
இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வேலுார் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.
முதல்கட்டமாக, வேலுார், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.
அதோடு, மாணவர் களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
- அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும்.
சென்னை:
தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள. டி.பி.ஐ. வளாகம், அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாட நூல் கழக கிடங்கு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
இந்த புத்தகங்களை பெற தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு இந்த பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வினியோகம் செய்ய டி.ஜி.பி. வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
தமிழ்நாடு பாட நூல் கழகம் மொத்தம் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சடித்துள்ளது. இதில் 3.75 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 1.25 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கான பைகள், காலணிகள், சாக்ஸ் வினியோகமும் தொடங்கியுள்ளது. கலர் பென்சில்கள், கிரேயான்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதத்திற்கு முன்பு வழங்கப்படும்.
9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முதல் பாடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி 'செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
- பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.
- அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
திருப்பூர் :
நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரையும், பிளஸ் 1 பொது தேர்வு மார்ச் 14-ந் தேதி துவங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும் , பிளஸ் 2 பொதுதேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும் நடக்கிறது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடனோ, கோடை விடுமுறைக்கு முன்னதாகவோ அவர்கள் அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
பொதுத்தேர்வை அவர்கள் எதிர்கொள்வதற்கு இது உதவும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்கி விட்டது. பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.
- மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
- உற்சாகமாக வாங்கி சென்றனர்
பெரம்பலூர்
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. அதனை மாணவர்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்