என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரிசர்வ் வங்கி கவர்னர்"
- 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நியமிக்கப்பட்டார்.
- கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். ஓய்வுபெற்ற தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட அந்த பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு முறை அதாவது 2-வது தடவையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது. ஆனாலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
ஜார்கண்ட் மற்றும் மராட்டியத்தில் இன்று (புதன்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல.
- பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
மும்பை :
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள், வெறும் 10.8 சதவீதமாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஆகும்.
இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கடந்த 8-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 50 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த வார மத்தியில் இருந்த நிலவரப்படி, ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. இவை மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம். இவற்றில் 85 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், மற்றவை வேறு நோட்டுகளாக மாற்றிய வகையிலும் வந்துள்ளன.
செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து, அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், பொருளாதாரம் மீது எதிர்மறை தாக்கம் எதுவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
- அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
கொச்சி :
கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது:-
இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.
நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.
அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
- நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.
மும்பை :
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-
கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்