என் மலர்
நீங்கள் தேடியது "திமுக போராட்டம்"
- சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
- மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் போராட்டம்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்," நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாக கண்டிக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.
அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த வக்கீல் கே. பாலு ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக மகளிர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
வெளியூரிலிருந்து வந்த பெண்கள் காலையில் போராட்டம் நடத்த முற்பட்டபோது அவர்களை கைது செய்து மாலை 7 மணி வரை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர். ஆனால், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மாநில கவர்னரை கண்டித்து ஆளும்கட்சியான தி.மு.க. இன்று சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை ஒரே நாளில் போலீசார் பரிசீலித்து போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர் . இது குறித்து தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும். எனவே ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் என்பதால் இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று முறையிட்டார்.
அதற்கு நீதிபதி, "இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் அந்த பொறுப்பை நான் உதறித் தள்ள விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து வழக்கு தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கை நாளை காலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். அந்த வழக்கை விசாரித்து தகுந்த உத்தரவையும் பிறப்பிக்கின்றேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
- மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது.
மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இந்தி மொழி திணிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.
"தமிழ் வாழ்க.." என முழக்கமிட்டபடியே இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா மற்றும் ரகுமான், தொ.மு.ச. காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை.
இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திமுகவினர் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,திருத்தணி எம்,எல்,ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, திருத்தணி பூபதி,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, திருவள்ளூர் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால்,மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன்,டாக்டர் குமரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனர்.