என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டுரை போட்டி"
- ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
- சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கட்டுரை போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஒண்ணுபுரம் கிளை மேலாளர் சுனில்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கினார்.
அப்போது தலைமை ஆசிரியர் பாபு ஆசிரியர்கள் திருமால் உள்பட பலர் உடனிருந்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.
- இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.
- கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது
கன்னியாகுமரி :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படு கிறது.
இதையொட்டி வருகிற 17-ந்தேதி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஓவிய போட்டியும், கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்ப டுகிறது.இந்த போட்டிகள் அனைத்தும் அன்று காலை 10 மணிக்கு தொடங்கும். இந்த போட்டிகளில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் காலை 9.30-க்குள் தங்களின் பெயர்களை கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். எழுதுவதற்கும், வரைவதற்கும் தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப்பொருட்களும், வைத்து எழுதுவதற்கு தேவையான அட்டையும் மாணவர்களே கொண்டு வரவேண்டும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்துகொண்ட அனை வருக்கும் சன்றிதழ்களும் வழங்கப்படும். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
- மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தாராபுரம் :
மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.
அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
- மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபத்தில் 18-12-2022 அன்று நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோடியாக குமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, இசைப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன நாகராஜா கோவில் மண்டபத்தில் வருகிற 10-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் கட்டுரை போட்டி நடந்தது.
- ‘சுதந்திர போராட்டத்தில் அறிவியல் அறிஞர்க ளின் பங்கு’ மற்றும் ‘சர்.சி.வி.ராமன்’ ஆகிய 2 தலைப்புகளில் நடந்தது.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் கட்டுரை போட்டி நடந்தது. போட்டிகள் 'சுதந்திர போராட்டத்தில் அறிவியல் அறிஞர்க ளின் பங்கு' மற்றும் 'சர்.சி.வி.ராமன்' ஆகிய 2 தலைப்புகளில் நடந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகஅளவில் கலந்து கொண்டு கட்டுரை எழுதினர். இதற்கான பரிசளிப்பு விழாவில் லட்சுமிபுரம் கல்லூரி பேராசிரியர் சுதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
போட்டியில் எந்திரவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி அபிராமி முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இறுதி ஆண்டு மாணவர் கிஷோர் 2-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவி சிவ நிவேதிதா 3-ம் பரிசாக ரூ.1000-மும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களை கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
முதல் பரிசு பெற்ற மாணவி அபிராமி அடுத்த மாதம் (நவம்பர்) 5, 6-ந் தேதிகளில் கல்பாக்கத்தில் அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்