search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஐ பெரியசாமி"

    • எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும்.
    • திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்க உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. இதுவரை பல நபர்களை பார்த்துள்ளது. 1973-ல் எம்.ஜி.ஆர் போன்ற பல தலைவர்களை கடந்து தான் தி.மு.க. வந்துள்ளது.

    தி.மு.க. பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம் தி.மு.க.

    75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். இன்னும் 100 ஆண்டு காலம் ஆனாலும், இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக இருக்கும். போராடக்கூடிய தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பார்.

    அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோஷம், மகிழ்ச்சி. ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு கஷ்டம் வரும் என்றால் அது இல்லை.

    எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள். எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும். விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை

    தந்தை பெரியாரின் திராவிட மாடலையும், ஒரு காலத்தில் காங்கிரஸ் சோசியலிசம் பேசியது. காமராஜர் மற்றும் அப்போது இருந்த தலைவர்கள் அனைவரும் பேசினார்கள். இதை குறையாக கூறவில்லை. அவர்கள் சமத்துவம் என்ற சோசியலிசத்தை நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் கொண்டு வருவோம் எனக்கூறினார்கள். தற்போது வரை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

    ஆனால் தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என 2 கோடி பேர் பயனடைகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம் வாழ்க்கை தரம் உயர்கிறது. கிராமப் பொருளாதரமும் உயர்ந்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்

    திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.

    கூட்டணியில் பங்கீடு குறித்து விஜய் பேசியதற்கு வி.சி.க. ஆதரவு தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு...

    இதுகுறித்து முதலமைச்சர் கொள்கைகளை வகுப்பார்.

    இதுவரை தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஒற்றைக் கொள்கையுடன் இருக்கிறார்கள். பதவி என்பதை கூட்டணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்பதே எனது கருத்து. தனித்து தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 முறை ஆட்சி அமைத்துள்ளோம் கூட்டணி ஆட்சி என்று இருந்ததில்லை.

    வருங்காலங்களில் எங்களது முதலமைச்சர் கொள்கை திட்டங்களை அறிவிப்பார். அதற்கு ஏற்றார் போல் தேர்தல் களம் அமையும்.

    உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் ஆலோசனை கேட்கப்படும். மேலும் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது நடத்தப்படும் எனக் கூறுகிறார்களோ அப்போது நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஜக்கையன், முருக்கோடை ராமர், கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

    பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
    • இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    சென்னை:

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இதேபோல 2001-2006ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    இந்த 2 வழக்குகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ .பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார்.

    • தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மத்திய அரசு நிதி குறைத்து கொடுத்தாலும் தமிழகத்தில் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் ரூ.800 கோடி செலவில் பழுதடைந்த அரசு தொடக்கப் பள்ளிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா போன்ற பிரச்சினைகளை சமாளித்து கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட பொழுதிலும், நிதி மேலாண்மை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மிகச் சிறப்பாக உள்ளது.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.85 ஆயிரம் கோடி வழங்கிய மத்திய அரசு, கடந்த பட்ஜெட்டில் அதை ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளது. மத்திய அரசு நிதி குறைத்து கொடுத்தாலும் தமிழகத்தில் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

    ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

    • மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.
    • மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோவில் தெரு அருகே உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினார்கள்.

    பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

    மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியும் பெண்களுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளது

    மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியானவராக யார் இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களையும், அதன் பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம், மாநில அரசு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் எங்கள் திட்டங்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கூட்டுறவு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பதிவாளர் சண்முக சுந்தரம், மேலாண்மை இயக்குனர் அமலதாஸ், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளையஅருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×