என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூச்சல்"
- சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.
- இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.
இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக ணப்பட்டது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.
இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை அறுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றார்.
- அந்த நபரை கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் உமா. இன்று தனது உறவினர்களுடன் ஒரு காரில் வெண்ணாற்ற–ங்கரையில் உள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது சாமி தரிசனத்தை முடித்துவிட்டு உமா காரில் ஏற முயன்றார். அந்த நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென உமாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த உமா , திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு கோவிலில் இருந்த பக்தர்கள் வேகமாக ஓடி சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கச் சங்கிலியை பறித்த நபர் யார்? எந்த ஊர்? இதற்கு முன் இதுபோல் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா ?
என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் அந்த நபர் பற்றிய தகவல் கிடைக்கும். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராம்குமார் கடந்த 8 மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
- கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி விவேதா (வயது 20). இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு நித்தீஸ்வரன் (வயது 1) என்ற ஆண் குழந்தை உள்ளது. ராம்குமார் வெளிநாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். விவேதா மாமனார் ராமலிங்கம், மாமியார் செல்வி, ராமலிங்கத்தின் தாயார் ராஜலட்சுமி ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முதல் நாள் காலை 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.
பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டிலிருந்துள்ளார்.
விவேதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு அறையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
காலை 11 மணி ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது விவேதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளில் விவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்