search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் காலம்"

    • பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
    • வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..

    • பேரிடர் காலங்களில் மின் விபத்து பற்றி தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டது.
    • முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் மாலதி (94458 53016) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மின் விபத்தை தவிர்க்க மின் வயர்கள் அறுந்து விழுந்தல், மின் கம்பம் சாய்ந்தல், மின் உபகரணங்கள் பழுதடைதல் ஆகியவற்றை கண்டறிந்தால் மின் துண்டிப்பு செய்ய, அது தொடர்பாக தகவல் தெரிவிக்க மின் வாரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இதன்படி, ராமநாதபுரம் கோட்டம் முழுவதும் செயற் பொறியாளர் இளங்கோ (94458 53033), ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிபட்டினம், ரகுநாதபுரம் பகுதிகளுக்கு உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் (94458 52662) ராமநாதபுரம் ஊரகப்பிரிவிற்குட்பட்ட உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேசுவரம், உத்தரகோசமங்கை பகுதிகளுக்கு செயற்பொறியாளர் செந்தில்குமார் (94458 53324) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், தொண்டி, ஆனந்தூர், நகரிகாத்தான் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் நிசாக் ராஜா (94458 52661), பரமக்குடி கோட்டம் முழுவதும் செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி (94458 53030), பரமக்குடி நகர் உப கோட்டம் முழுவதும் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் (94458 52663) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். பரமக்குடி கிராம பகுதி, சத்திரக்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் (94458 53014), கமுதி நகர், கமுதி கிராம பகுதி, அபிராமம், பெருநாழி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் விஜயன் (94458 53015), முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் மாலதி (94458 53016) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    ×