என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீரமரணம்"
- காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
- வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
- பேராவூரணி தீயணைப்பு சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
- பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில்தீ த்தொண்டு நாள் அனுசரிக்க ப்பட்டது. மீட்பு பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌ ரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்ப டுகிறது.
இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் (போக்கு வரத்து) ராமச்சந்திரன் தலைமையில், சமூக ஆர்வலர் மருத்துவர் நீலகண்டன் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், விக்னேஷ், ஆகாஷ் கண்ணன், வினோத், நிரஞ்சன், விமல் ராஜ், வெங்கடேசன், செல்வகுமார், குமரேசன், சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.
- திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
- டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் :
பணி காலத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்து இருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பணிகாலத்தில் 261 பேர் உயிர் நீத்துள்ளனர்.அதில்தமிழகத்தில் மூன்று பேர் உயிர் நீத்துள்ளனர்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடிய கள்ளவர்களை பிடிக்கச் சென்ற பொழுது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவர் உட்பட 2 கவாலர் வீர மரணம் அடைந்துள்ளனர். தியாகத்தை நினைவு போற்றும் வகையில் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,இவரைத் தொடர்ந்து ஏடி.எஸ்.பிக்கள் கோவிந்தராஜ், தேவராஜ், டிஎஸ்பிக்கள் பார்த்திபன், ஜனகராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் ரேவதி, தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 'பின்னர் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு விண்ணை பிளக்கும் வண்ணம் 21 குண்டுகள் 3 முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்