search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்தது"

    • காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பணி முடிந்ததும் இரவு அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினர். தாங்கள் வந்த போலீஸ் வேனை வடக்குத்து போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த வேனின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்த வேனை பார்வையிட்டார்.

    வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மதுரையில் திடீரென்று வேன் தீப்பற்றி எரிந்தது.
    • அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது.

    மதுரை 

    மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார்.

    அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 3 மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தபோது அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டார். இதைத்தொடர்ந்து வேன் தீப்பற்றி எரிந்தது.

    இதுபற்றி நிஷாந்த் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வேன் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
    • அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம், டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ப வரது மகன் செந்தில்குமார். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகிறார்.

    தென்னை மரங்களுக்கு கீழ் தகர சீட்டு கொண்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் வடமாநிலத்தவர்கள் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது. இதில் அந்த தென்னை மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதை தொடர்நது மரத்தில் இருந்து நெருப்பு பொறிகள் கீழே இருந்த குடியிருப்பு பகுதியின் மீது விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த வர்கள் உடனடியாக பெரு ந்துறை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தென்னை மரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணை த்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடு த்தனர்.

    ×