என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்"
- உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
- நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 15ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு பதில் 12ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வங்காளதேசம்-நியூசிலாந்து ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுளள்து. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி காலை 10:30 மணிக்கு ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணி புனேவில் மோதுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடுகின்றன.
நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் 11ம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
- பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
- ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.
ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.
பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு
- இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் பாகிஸ்தான் பந்து விச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி.
மெல்போர்ன்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.
எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- 8 அணிகள் கலந்துகொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.
- சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது.
தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளை யாடுகின்றன. முதல் சுற்று மூலம் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. 8 நாடுகள் கலந்து கொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.
இதன் முடிவில் ஏ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்தும் , பி பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, அயர்லாந்தும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
குருப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான் , இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றின் இன்றைய தொடக்க ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகள் இடையே யான 20 ஓவர் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 68.
உள்நாட்டில் மட்டுமே சிறப்பாக ஆடுகிறது, வெளி நாடுகளில் கோட்டை விட்டு விடுகிறது என்ற விமர்சனம் இந்திய அணி மீது இருக்கிறது. அதை சரி செய்ய உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா சாதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். சமீப காலமாக பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதை சரி செய்வது அவசியமாகும். பும்ரா, ஜடேஜா இல்லாதது அணிக்கு பாதிப்பே.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பஹர் ஜமான் ஆகியோரும் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி திரும்பி இருப்பது அணிக்கு கூடுதல் பலமே.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 80 முதல் 90 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்