search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்ரங் புயல்"

    • சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியாவின் அசாம் உள்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது.

    டாக்கா:

    வங்காள தேசத்தில் சிட்ரங் புயல் நேற்று கரையை கடந்தது. இந்தப் புயலால் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து புயல் வலுவிழந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் புயல் கரையை கடந்ததால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த புயலால் டாக்கா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், கமில்லா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர், போலா நகரை சேர்ந்த 2 பேர் மற்றும் நரைல், ஷரியத்பூர், பர்குனா மற்றும் டாக்கா நகரங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புயலில் இருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க 15 கடலோர மாவட்டங்களில் 7,030 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 2 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது.
    • இந்தியாவின் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது.

    இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

    இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டன.

    மேலும் மக்கள் பாதிக்கப்படும்பட்சத்தில் உதவ 104 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. 323 டன் அரிசி உள்பட உணவு பொருட்களும் விநியோகிக் தயார் நிலையில் உள்ளன.

    இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது. இதன் எதிரொலியால், வங்கதேசத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் இந்தியாவின் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 576 பாதுகாப்பு முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. வங்காளதேசத்தை இன்று அது கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உதவ வேண்டும்104 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 323 டன் அரிசி உள்பட உணவு பொருட்களும் விநியோகிக் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவில் புயல் மையம்கொண்டிருந்தது
    • வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும்.

    புதுடெல்லி:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்காளதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சிட்ரங் சூறாவளி புயல் இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும், என்று தெரிவித்து உள்ளது.

    புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக திரிபுராவில் அதிக மழை பெய்து மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், அங்கு 24 மணி நேரத்தில் 20 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலட்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் வரும் 26ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புயலை முன்னிட்டு இன்றும், நாளையும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளது. புயலானது, மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்து உள்ளது. 

    • ‘சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது.
    • புயல் கரையை கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.

    'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இந்த புயல் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலம், செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அது இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகும்வரையில் அந்த பருவமழைக் காலம் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாக தெரிவித்த ஆய்வு மையம், இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 49 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    ×