search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத போதகர்"

    • சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    மெக்சிகோவில் உள்ள ஆலயத்தை சேர்ந்த போதகர் ஒருவர், சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்த போதகர் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    அப்போது சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய கடவுள் அவருக்கு அதிகாரம் அளித்ததாகவும், அவர் தெரிவித்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    இதன் அடிப்படையிலேயே அந்த தேவாலயத்தினர் சொர்க்கத்தில் நிலங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் குவிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    முதலில் இதை ஆலய நிர்வாகத்தினர் விளையாட்டாக தொடங்கியதாகவும், பின்னர் இதை சீரியசாக எடுத்துக்கொண்ட சிலர் மனைகளை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர்.
    • 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நைரோபி :

    கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்கிற தேவாலயம் உள்ளது.

    இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்த பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதாவது, பாதிரியார் பால் மெக்கன்சி தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து பாதிரியார் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் தனது பண்ணையில் மொத்தமாக புதைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

    அதனையடுத்து, போலீசார் அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டதோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை மந்திரி கிதுரே கிண்டிகி, "800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், போலீசாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை போலீசார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

    மாலிண்டி நகரில் 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால் இறைவனை சந்திக்க முடியும் என மத போதகர் பால் மெகன்சி கூறியதாக தெரிகிறது.

    நைரோபி:

    கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் கடற் கரையோர பகுதியான மாலிண்டி நகரை சேர்ந்தவர் பால் மெகன்சி. ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதகராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை அங்கு உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி உள்ளனர்.

    இந்த பண்ணையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் போலீசில் புகார் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் பண்ணைக்கு சொந்தமான நிலத்தை தோண்டினார்கள்.அப்போது போலீசார் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த நிலத்தில் இருந்து தோண்ட,தோண்ட, உடல்கள் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 21 பிணங்கள் கிடைத்தது. தொடர்ந்து மேலும் 26 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்து இருக்கிறது.

    அந்த உடல்கள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ் டிக்கவரால் சுற்றப்பட்டு இருந்தது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால் இறைவனை சந்திக்க முடியும் என மத போதகர் பால் மெகன்சி கூறியதாக தெரிகிறது.

    இதனால் அவர்கள் பட்டினி கிடந்ததாகவும், இதன் காரணமாக இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் பால் மெகன்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணை நிலத்தில் வேறு யாரும் புதைக்கப்பட்டு உள்ளார்களா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மேலும் உடல்கள் சிக்கும் என தெரிகிறது.

    மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும். இந்த சம்பவம் கென்யா நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவட்டார் போலீசார் விசாரணை
    • தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவியிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே பள்ளிகுழிவிளை பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக ஜோண் குட்டி (வயது 62) செயல்பட்டு வருகிறார்.

    நேற்று மாலை தனக்கு தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவி யிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.

    மார்த்தாண்டம் பகுதியில் சென்று பார்த்தபோதும், பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்த போதும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் ஷெரின்ஜோண் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்.

    ×