search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரன்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
    • 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.

    அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.

    பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.

    சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.

    இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.
    • பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக கரன்சி கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது.

    கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது.

    அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து கரன்சி பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

    குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது.

    அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

    மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு₹ 83.10.

    ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    • திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • மலேசியாவிற்கு கடத்தவிருந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

    கே.கே.நகர், 

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது.இந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39). என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
    • கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, 'நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்' என்றார்.

    இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

    இதுபற்றி அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என கூறினார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×