என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "108 சங்காபிஷேகம்"
- சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம்.
- ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.
கோவில் தோற்றம்
திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளின் அழகிய சூழலில் அமைந்துள்ளது ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்கிறார்கள்.
தல வரலாறு
தேவலோக தலைவனான இந்திரனின் மகன் ஜெயந்தன். இந்திரனின் மகன் என்பதால் இவன் ஆணவத்தில் நடந்து கொண்டான். இதனால் பிறரிடம் வம்பிழுத்து சாபம் பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு முறை ஜெயந்தன் சென்று கொண்டிருந்த வழியில், அவனுக்கு எதிர் திசையில் அத்ரி முனிவர் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அத்ரி முனிவருக்கு, ஜெயந்தன் முறையாக வணக்கம் தெரிவிக்காதது மட்டுமின்றி, அவரது நடையைப் பார்த்து 'நண்டு ஊர்ந்து செல்வதுபோல உள்ளது' என்று கிண்டல் செய்தான். இதனால் கோபம் கொண்ட அத்ரி முனிவர், ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.
இதனால் பதறிப்போன ஜெயந்தன், 'தன் பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று அத்ரி முனிவரின் காலில் விழுந்து வேண்டினான். இரக்கம் கொண்ட அத்ரி முனிவர், "மணவூர் என்ற இடத்தில் உள்ள திருநந்தீஸ்வரர் ஆலயத்தில் அருளும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வா. உன்னுடைய சாபம் நீங்கும்" என்று கூறி அங்கிருந்து அகன்றார்.
மறுநொடியே ஜெயந்தன் நண்டாக மாறிவிட்டான். பின்னர் அவன், மணவூர் வந்து திருநந்தீஸ்வரரை வழிபட்டு, ஊரின் எல்லையில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்தான். அப்போது சிவபெருமான், பூமியை பிளந்து கொண்டு பிரகாசமான லிங்கத் திருமேனியுடன் அவனுக்கு காட்சியளித்தார்.
சுயம்புவாக தோன்றிய இந்த இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்த ஜெயந்தன், அந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வதற்காக அங்கே ஒரு திருக்குளத்தையும் உருவாக்கினான்.
பின்னர் நண்டு வடிவில் நாள்தோறும் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜித்து வந்தான். தொடர் வழிபாட்டின் காரணமாக, சிவபெருமானின் அருளால் ஜெயந்தன் மீண்டும் தன்னுடைய சுய உருவைப் பெற்றான்.
நண்டு வடிவில் ஜெயந்தன் இறைவனை வழிபட்டதால், இங்கு உள்ள மூலவர் 'கற்கடேஸ்வரர்' என்று திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். கற்கடேஸ்வரருக்கு வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் முருகப்பெருமானும் அருள்பாலித்து வருகின்றனர்.
கற்கடேஸ்வரருக்கு இடது புறம் ஆதி காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த காமாட்சி அம்மன், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால் காஞ்சி மகா பெரியவர் இங்குள்ள காமாட்சி அம்மனுக்கு 'ஆதி காமாட்சி' என்று பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.
இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் தெய்வமாகவும் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் திகழ்கிறார்.
சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இத்தல இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இது தவிர இவ்வாலயம் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், துவார கணபதி, பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், பலிபீடம் ஆகியவை உண்ளன. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, அன்னாபிஷேகம், சிவராத்திரி, தை மாதத்தில் 108 சங்காபிஷேகம் போன்ற நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். கும்பகோணம் அருகே திருந்து தேவன்குடியில் பிரசித்தி பெற்ற கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. அதே போல் நண்டு வழிபட்ட கற்கடேஸ்வரர் ஆலயம் மணவூரில் உள்ள இந்த ஆலயம் மட்டுமே என்கிறார்கள்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி ரெயில் மார்க்கமாக செல்கையில் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சற்று தொலைவில் இயற்கை சூழலுடன் வயல் அருகே வீற்றிருக்கும் இந்த கற்கடேஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
- பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.
புதுச்சேரி:
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.
காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
- நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
- விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்.செப்.17-
வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சரவணம்பட்டி,
கோவை கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி விழா நடந்தது.
நேற்று மாலை 4.30 மணிக்கு சனி பிரதோஷ பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இரவு 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு 3-ம் கால பூஜை மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெற்று மகா சிவராத்திரி விழா நிறைவு பெற்றது. ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
இந்த விழாவில் கோவில்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
- ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.
வல்லப விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால் ,தயிர், தண்ணீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று காலையில் பாலசுப்பிரமணியனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு காவடி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைவருக்கும் நீர் மோர் பாணகமும் மகா அன்னதானமும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வல்லவ விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.
- 3 கால யாக பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கூழ்மாரியம்மன், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து 48 நாள் நெய் விளக்கு பூஜை செய்தனர்.
நேற்று மண்டல பூஜை நிறைவு விழா, மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இஞ்சிமேடு சிவன் கோயில் அர்ச்சகர் ஆனந்தன், குழுவினர்கா லையில் கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் மற்றும் 108 சங்குகளை வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர்.
பின்னர் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் 108 சங்குகள் மற்றும் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து புனித நீரை கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதியில் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமம் கோவிலில் நடைபெற்றது.
தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மாலையில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்