என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலம் ஆக்கிரமிப்பு"
- உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை:
சென்னை அருகே பரங்கி மலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்த, நிலையில் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் தாசில்தார், அந்த நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு 'சீல்' வைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வன்னியர் சங்க கட்டடத்துக்கு 'சீல்' வைத்த அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு கூறியுள்ளது. யாருடைய இடம் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக வன்னியர் சங்கம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்த வழக்கில் புற எதிர் மனுதாரர்களான காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம், கன்டோன்மென்ட் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
- சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
- பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் ரோடு சாலையில் சின்னு நகர் அமைந்துள்ளது.
இந்த நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த பல வருடங்களாக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்ோது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், சின்னு நகரில் பேரூராட்சி பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் தற்போது தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பழைய பைல்களை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் பேரூராட்சியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்.
பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரப்பு செய்தவர்கள் தாங்களாக பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு ஆக்கிர மிப்புக்கும் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காது என்றார்.
- சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் என்பவர் எங்கள் ஊர் மக்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் மயானத்திற்கு கொடுத்தார்.
இந்த நிலத்தை சரி பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் பதிவேட்டில் மயான பகுதி என்று காட்டப்பட்டுள்ளது.
தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே எங்கள் கிராமத்திற்கு சொந்தமான மயான பகுதியை மீட்டு தர வேண்டும். மேலும் எரிமேடை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
- கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர்.
- மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் காடையாம்பட்டி பகுதியில் உள்ளது. இதில் கோவிந்தனின் சகோதரி மல்லிகா பாகமான 10 ஏக்கர் நிலத்தை கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், மாணிக்கம், மகள் மணிமேகலை ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக தங்கள் பெயரில் மாற்றி கொண்டனர்.
மேலும் கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் ஓமலூர் வட்டம் நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா 5 பேர் மீதும் போலி முத்திரை தயாரித்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.
- 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி மத்தூர் அருகே உள்ள பெங்களுரு, பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நிலத்தில் அரசு அலவல கங்கள் கட்டுவதற்கும் மற்றும் அரசுக்கு தேவைப் படுவதால் அந்த நிலத்தை தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் ஆக்கிர மிப்பு செய்தவரிடம் வருவாய்த்துறை சார்பில் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தவறு என பலமுறை எச்சரித்தும், காலி செய்யும்படியும் கூறி உள்ளனர்.
ஆனால் அந்த நிலத்தை காலி செய்யாமல் அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் வருவாய் துறை சார்பில் கலெக்டரின் நேரடி பார்வைக்கு இந்த விவகாரம் சென்றதால் அவரது உத்தரவின் பேரில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் தலைமையில் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளரை வெளியேறும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர் வெளியேற மாட்டேன் என கூறி அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 50 மேற்பட்ட போலீஸார் உதவியுடன் ஆக்கரமிப்பு செய்துள்ள நிலத்தில் அமைத்துள்ள பனை ஒலையால் வேய்யப்பட்ட கொட்டகையை பிரித்து எடுத்து காலி செய்தும், அந்த நிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமப்பு செய்தால் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என அறிவிப்பு பலகை வைத்து நிலத்தை முற்றிலும் அரசுக்கு சொந்தமானது என உறுதி செய்தனர்.
இதுகுறித்து அரசு அலுவலர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்த தாலும், வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாலும் மஞ்சுளா (வயது 56), மகாலிங்கம் (60), பிரபாவதி(30), கண்ணன் (37) , மஞ்சுநாத் (எ) கோபி (19) ஆகிய 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்