search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 மாணவன்"

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள். தற்போது 4-ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியே சொன்னால் ஒழித்து விடுவேன் என சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து நிலையில் இருந்துள்ளார்.

    சிறுமியை கண்ட பெற்றோர்கள் விசாரித்த போது அந்த மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடலூர்

    சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பஸ்சுக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவனை ஒரு கும்பல் தாக்கியது.
    • இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சூலப்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 16). இவர் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் கடந்த 21-ம் தேதி அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டித்து ரை என்பவர் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தில் சுரேஷ், பாண்டித்துரைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் சம்பவத்தன்று காலை அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சீல்நாயக்கன் பட்டி பஸ் நிறுத்தம் அருகில் 30 பேர் கும்பல் நடு ரோட்டில் நின்று பஸ்சை வழி மறித்தது. அவர்கள் பஸ்சில் புகுந்து சுரேசை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    சுரேசை சக மாணவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீல்நாயக்கன்பட்டி பரமன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×