என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முத்துராமலிங்க தேவர்"
- தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது.
தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதோடு தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், லட்ச்சார்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஏராளமான பக்தர்கள், தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அலகு குத்தியும், காவடி எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல பலர் முடிக்காணிக்கையும் செலுத்தினர்.
இந்த நிலையில், பசும்பொன் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக மதுரை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
- முத்துராமலிங்க தேவர் அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி.
- அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள "தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்" திறந்து வைக்குமாறும் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தியும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்து ராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நவாஸ் கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன் திருமகனாரின் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்குப் பதிலாக, இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு இதே நாளில் அறிவித்தேன்; இன்று 'தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்க'த்தைத் திறந்து வைத்தேன்! pic.twitter.com/XkXJ4TVV3t
— M.K.Stalin (@mkstalin) October 28, 2024
- பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
- மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பூதப்பாண்டி :
அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் பொதுமக்கள் சார்பில் பூதப்பாண்டியை அடுத்துள்ள தெரிசனங்கோப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது குருபூஜை விழா நடந்தது.
விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க செயலாளர் சுபாஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகன், தோவாளை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஜான் அசூன், வார்டு உறுப்பினர் ரதீஷ், மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் பகுதியில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அரசின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
முத்துராமலிங்க தேவர் படத்திற்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி, வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பச்சைமால், ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வக்கீல் முருகவேல் பாபு, வேல் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ஆர்.வெங்கடேசன், சைதை மனோகரன், ஆர்.எஸ்.முத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செந்தமிழன், சுகுமார் பாபு உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியையொட்டி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் அம்பத்தூர் பாலமுருகன், அப்புனு, தாமு ஆகியோர் மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அஸ்லாம், கவியரசன், நரேஷ்குமார், கருணாகரன், கார்த்திகேசன், சுரேஷ், வினோ விஜய், கோபிநாத், பிரவீன், ஆனந்த் உள்பட சென்னை மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பா.ஜனதா கட்சி சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பாலு எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், எம்.எல்.ஏ.க்கள் மயிலை வேலு, தாயகம் கவி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கே.கே.நகர் தனசேகரன், செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தும், படத்துக்கு மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், மாதவரம் மூர்த்தி, பாண்டிய ராஜன், சரோஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சத்யா, வேளச்சேரி அசோக், விருகை ரவி, ராஜேஷ், கந்தன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அெலக்சாண்டர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன்.
கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, திருமங்கலம் கே.மோகன், கே.பி.முகுந்தன், கொளத்தூர் கணேசன், சைதை சொ.கடும்பாடி, வேளச்சேரி மூர்த்தி, ஏ.எம். காமராஜ், வக்கீல் சதாசிவம், எம்.ஜி.அர்.நகர் வெற்றிவேல் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் தாமோதரன், மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன், மாணவர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் யஷ்வந்த் சாகர் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா கட்சி சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர் எஸ்.வி.சேகர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பல்வேறு தேவர் சமூதாய அமைப்புகள் சார்பிலும் ஏராளமானோர் திரண்டு வந்து நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர்.
மேற்கு மாம்பலத்தில் தென் சென்னை பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் சரவணன் ஏற்பாட்டில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், தஞ்சை ராமநாதன், டாக்டர் வெங்கடேசன், நாகேஷ் ராஜன், தி.நகர் விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
- மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60- வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் முக்குலத்து சொந்தங்கள், அரசியல்வாதிகள் மலர் வளையம் கொண்டுவர வேண்டாம். மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு சேதுபதி பாலம் என பெயர் சூட்ட வேண்டும். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சீர் மரபினராகிய தேவரினத்தை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக அறிவிக்க வேண்டும். நேதாஜி படம், பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் படத்தையும் இந்திய அளவில் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்.
கள்ளர், மறவர், அகமுடையார் மூவரையும் தேவர் என ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்