என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடகளப் போட்டிகள்"
- கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் தொடங்கியது.
- மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்பவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்விதுறை சார்பில் வருவாய் மாவட்ட அளவி லான 2 நாள் தடகளப் போட்டி நேற்று தொடங்கி யது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனி ராஜ், தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை, பெருமாள் மணிமேகலை கல்லூரி இயக்குனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், 100, 200, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 1450-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட உள்ளன. முதலிடம் பெறும் மாணவ, மாண விகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் துரை, உடற் கல்வி இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜான்பாய், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், பார்த்தீபன், அருளரசு, ரகுசரவணன், ஜோதி ஆகியோர் கவுர விக்கப்பட்டனர்.
இதில், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தேவி, கவுன்சி லர்கள் ஜெயகுமார், பிர்தோஷ்கான், செந்தில்கு மார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாண வியர் மற்றும் ஆசியர்களுக்கு மதிய உணவு வழங் கப்பட்டது.
- 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- முதல், 3வது இடம்பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினிக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகள், ஊட்டி கார்டன் சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக வட்டெறிதல் போட்டியில் நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி கீர்த்திகா மண்டல் அளவில் முதலிடத்தையும், விஷ்ணுவர்தினி 3வது இடமும் பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் கீர்த்திகா மீண்டும் முதலி டம் பிடித்தார். தடகள போட்டிகளில் முதல், 3வது இடம் பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினி ஆகியோருக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.
தருமபுரி,-
தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.
கல்லூரி மாணவிகளுக்கான சிலம்பம், கபடி, கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, இறகுபந்து, உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி தருமபுரி தனியார் பள்ளியிலும் நடக்கிறது.
கல்லூரி மாணவர்களுக்கான சிலம்பம், கபடி, கூடை பந்து, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, போட்டிகள் நேற்று தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நேற்று ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் இன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
மூன்று நாட்களாக நடைபெறும் இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.
- விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
- மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்