search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறுப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெட்ரா மகாகாளி கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.

     

    இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.

     

    • மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும்

    உலகின் புவிசார் அரசியல் போர்களுக்கிடையிலும் பதற்றங்களுக்கு இடையிலும் குழம்பிக் கிடைக்கும் நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர தேர்தலை அறிவித்தார்.

    முன்னதாக நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்த நிலையில் இந்த முடிவை மேக்ரான் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து பிரான்சில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமானுவேல் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி தேர்தல் என்பதையும் தாண்டி உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததை அடுத்து மேக்ரான் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

     

    • நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×