என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரி ஏய்ப்பு"
- 2017 - 2022 வரை இந்த வரி ஏய்ப்பு நடந்ததாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல்.
- இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்தன.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஜூலையில் இருந்து 2022 மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து சேவைகளை இறக்குமதி செய்ததில் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் தனது நிறுவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குள் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அறிக்கை வெளியான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்துள்ளன.
- 8 மணல் குவாரிகளில் சோதனை நடைபெற்றது.
- ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.
6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்ற தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.
குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர். அதில் மணல் அள்ளப்பட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல்கள் அள்ளப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.
மொத்தம் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் கணக்கு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலகோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி.விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணிக்கு கோபெல்கோ கன்ஸ்டக்ஷன் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 16 இடங்களுக்கு மொத்தம் 273 எந்திரங்களை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
இதன் மூலம் சட்ட விரோ தமாக மணல் விற்பனையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
- இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப் பத்திரிகையில், ஹண்டர் பைடன் 2016 முதல் 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்திருக்கிறார். இந்தப் பணத்தைப் எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார். ஆனால், 2016 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
அதிபர் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், ஹண்டரின் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, 2018-ல் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக ஹண்டர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
- ரூ. 1 கோடி பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல்.
போலியான ஆவணம் மூலம் மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள் வாங்கிய புகாரில் கன்வர்லால் குழுமம் தொடர்படைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செயற்கை வண்ண தயாரிப்பு, மருந்து விநியோகம் என பல்வேறு தொழில்களை நடத்தி வரும் கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
இதில், ரூ.50 கோடி வரி ஏய்ப்பு இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கணக்கில் காட்டாமல் ரூ.50 கோடிக்கு பொருட்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ. 1 கோடி பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- டிரம்பின் இரண்டு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது.
- இந்த தீர்ப்பு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
நியூயார்க்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்ப நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு உட்பட்ட தி டிரம்ப் கார்ப்பரேசன், டிரம்ப் பே ரோல் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக 17 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், டிரம்பின் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு 1.6 மில்லியன் டாலர் (ரூ.13 கோடி) அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பானது, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
- பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது.
- கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கே.வி. டெக்ஸ் துணிக்கடையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள் வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கே.வி. டெக்ஸ் கடையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கே.வி.டெக்ஸ் நிறுவனம் கடலூரில் முக்கிய சாலையாக உள்ள சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு வைத்து புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் கே.வி.டெக்ஸில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமானத்துறை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். பின்னர் கடலூர் கே.வி.டெக்ஸில் ஆடைகள் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்களை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கே.வி.டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடைகள் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள்? எத்தனை கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்கள்? இதில் அரசுக்கு சரியான முறையில் வரி செலுத்தி உள்ளார்களா? அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதோடு கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் 3 கார்களில் வந்த 7 அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவை இந்திராகாந்தி சிலை அருகே கே.வி. டெக்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து 8 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு ஊழியர்களிடம் இருந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த சோதனை நடைபெற்றது. சோதனையை தொடர்ந்து புதுவை கே.வி.டெக்ஸ் கடை முன்பு துப்பாக்கி ஏந்திய 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மற்றும் புதுவை கே.வி. டெக்ஸ் நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட கட்டிடம் சரியான முறையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கடலூரில் தமிழக அரசும், புதுவையில் புதுவை அரசும் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்தந்த அரசிடம் உரிய அனுமதி பெற்று சட்டதிட்டத்திற்குள் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கே.வி.டெக்ஸ் நிர்வாகத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என வருமானவரித்துறையினர் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்