என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம சபை"
- கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது
- தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும்.
நாகர்கோவில் :
தக்கலை ஊராட்சி ஒன்றியம், மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிலாவிளை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (புதன்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அரசின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திடவும், உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும்.
தற்போது, மழை காலம் ஆரம்பித்து விட்டதால், தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க வேண்டும். நோய்கள் பரப்பும் கொசு உற்பத்தி ஆகுவதை பொது மக்கள் தடுக்க முன்வர வேண்டும். ஏதேனும், நோய் ஏற்பட்டால், அது நேரடியாக உங்களையும், மறைமுகமாக உங்களது பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய வீட்டுவரி, சொத்துவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், தங்களது கைப்பேசி எண்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்திட வேண்டும்.
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரை "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை காவலர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி னார்.
கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி)ரஜத் பீட்டன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை இயக்குநர்கள்ஷீலா ஜாண் (தோட்டகலைத்துறை), வாணி (வேளாண்மை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்அ ருள் அந்தோணி, மருதூர் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்செல்வராணி, கல்குளம் வட்டாட்சியர்கண்ணன், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்அன்பு உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்ட னர்.
- திருப்பத்தூர்-சிங்கம்புணரி ஒன்றியங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
- துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்க ளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.முன்னதாக முறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் பெண் குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட வைகளை வலியுறுத்தி கலெக்டடர் உறுதி மொழியை வாசிக்க அமைச்சர், கிராம மக்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதே போல் மகிபாலன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கொன்னத்தான்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் அழகுபாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் பால்துரை, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜ், ராஜேந்திர குமார், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், துணைச் செயலா ளர் ஷீலா ராணி சொக்கநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வநாயகி, ஊராட்சிஒன்றிய மேற்பார்வையாளர் பெரியசாமி, ஊராட்சி செயலர்களான மதிவாணன், சிவனேஸ்வரி, உதவி யாளர் குரு, மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
- மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மூலனூர்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரபாளையம் ஊராட்சி மற்றும் பெரமியம் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறினார்.
கூட்டத்தில் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு சிவசாமி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரமியம் ஊராட்சியில் ஊராட்சித் துணைத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு இரு ஆண்டுகளில் செய்த சாதனைகள் காணொளி காட்சி மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அந்த பகுதி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் பெரமியம் ஊராட்சி தலைவர் ராணி , போளூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்திக் , மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரை , மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய இளைஞரணி மற்றும் மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இக்கிராமத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் 1958 வீடுகளில் 1946 வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். மேலும் பொது வெளியில் கழிப்பறைக்கு செல்லாமல் பாதுகாப்பான முறையில் வீடுகளில் உள்ள கழிப்பறையில் செல்லும் போது சுகாதாரம் பேணிக் காக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நகரப் பகுதி விரிவாக்கம் அடைவதோடு இந்த பகுதி பொருளாதார அடிப்ப டையில் முன்னேறக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி பஸ்நிலையம் அமைப்பதால் இந்த பகுதி வளரக்கூடிய மையமாக மாறக்கூடும். வருங்காலங்களில் லால்பு ரம் பெரிய நகரமாக மாறுவ தற்கு ஏதுவாக அமையும் . இது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி முழுவதும் சுகாதா ரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சி துணை இயக்குனர் சபனா அஞ்சும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- திரு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு சார்பில் கிராம சபை கூட்டம் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் மாணிக்கம் நகர், ஜீவரத்தின மாள் நகர், ஜீவன் நகர், திரு நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- விஜய் வசந்த்துக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தினர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மருங்கூர்:
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் கொடை விழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்பு பத்மநாபபுரம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் விஜய் வசந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல்
- ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இன்று கலந்துரையாடினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-
ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையினை பயன்படுத்துதல், ஊராட்சி யினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், உதவி இயக்குநர் பொன்னம்பலம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜீலியட் மேரி விக்டர், முகையூர் ஊராட்சி மன்ற தலைவர் லூயிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற 15-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்த தாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்த விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது. இதனால் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன.
- பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
விழுப்புரம்:
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜா ராம் ஊராட்சி உறுப்பி னர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள் ஊராட்சி செயலாளர் கனகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.
நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு
களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.
தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ
நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்