search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்பிக்கள்"

    • பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெறுகிறது.

    பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆனால் அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    • மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தும்.

    இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

    அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு வளர்ச்சிக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் இதை கண்டித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது, இதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் கருப்பு ச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். பெண் எம்.பி.க்கள் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்.

    கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும், நிதி ஒதுக்கீட்டில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக்கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் ரத்து செய்... ரத்து செய்... ஜி.எஸ்.டியை ரத்து செய்... என்னாச்சு, என்னாச்சு மதுரை எய்ம்ஸ் என்னாச்சு, தூண்டாதே, தூண்டாதே மதவெறியை தூண்டாதே, குறையவில்லை.. குறையவில்லை... விலைவாசி குறையவில்லை., என்னாச்சு... என்னாச்சு... 20 கோடி வேலைவாய்ப்பு என்னாச்சு... வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! தமிழக அரசை வஞ்சிக்காதே..., வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்! அடக்குமுறையை வீழ்த்துவோம்... என மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையே வழங்கினார்கள்.

    • தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    சென்னை :

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
    • எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால பாராளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

    இவை தவிர நடைமுறையில் இல்லாத தேவையற்ற சட்டங்களை ரத்து செய்யவும் இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. என்றாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்குவதால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. எனவே பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில்கலந்து கொண்டு பதிலடி கொடுக்க தீர்மானித்துள்ளன. இதை கருத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சிறப்பு கூட்டம் நடக்கும் 5 நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சனாதன சர்ச்சை ஆகியவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

    மேலும் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் தங்கள் மாநில பிரச்சனைகளை சிறப்பு கூட்டத்தில் எதிரொலிக்க செய்ய முடிவு செய்துள்ளன. அந்த வகையில் தமிழக எம்.பி.க்கள் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாத பிரச்சனையை எழுப்பும் என்று தெரிகிறது.

    இதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டு இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மேம்படுத்தும் வகையில் ஜி-20 மாநாடு நடத்தப்பட்டதையும், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதையும் முன்னிலைப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதன் காரணமாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று காலை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

    மழைக்கால கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என். ரவி விவகாரம், பொதுசிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

    • கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

    இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடம் முறையிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ள கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தொ.மு.ச. தொழிற்சங்கம் சண்முகம் எம்.பி., ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் நேற்று கையெழுத்திட்டனர்.

    தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்தீபன், கல்யாண சுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று காலையில் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

    எனவே விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இந்த கடிதத்தை எம்.பி.க்கள் வழங்க உள்ளனர்.

    ×