என் மலர்
நீங்கள் தேடியது "Minister Geethajeevan"
- 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
- பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும்.
நாகர்கோவில்:
சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பள்ளியில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 15 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்சனைக்கு பிறகே பெற்றோருக்கு தெரியவருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்சனைகள் குறித்து உடனடியாக பெற்றோர், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதிக புகார் வருவது நல்லது. இதனால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட வெளிவரும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல் வருகிறது. செல்போன் போன்ற பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை வாய் சவடால் பேசுகிறார். பொதுவாக அவர் ஏதேனும் பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. இவர்போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க.வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லது. மக்களோடு மக்களாக பயணித்தால் தான் மக்கள் பிரச்சனைகளை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த என்று உத்தரவிட்டு இருந்தார்
- அமைச்சர் கீதாஜீவன் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
தூத்துக்குடி:
முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்
இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் மாநகர பகுதியான 26, 27வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், மார்கெட் ரோடு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, செயின்ட்ஜான் தெரு, வடக்கு வானியன்விளை, தெற்கு வானியன்விளை, உள்பட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வட்டப் பிரதிநிதிகள் ஏகாம்பரம், ஜெயக்குமார், அவைத் தலைவர்கள் திருமணி, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.