search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி காட்சி"

    • மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
    • இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.

    மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.

    பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

    அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    கடந்த 11ம் தேதி சிறுவனை, மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலையத்தில் ராணி என அடையாளம் காணப்பட்ட 38 வயது பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பதற வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ராணியும் அவரது லிவ் இன் பார்ட்னர் கிஷோரும் 2வது நடைமேடை நாற்காளியில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிட, தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ராணி தண்டவாளத்தில் குதித்து கிஷோரை மிரட்டினார்.

    அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் நெருங்கி வருவதை அறியாத ராணி நடைமேடை அருகே சென்று ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ராணி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து ஜிஆர்பி கன்டோன்மென்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சமர் பகதூர் கூறுகையில், "ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போதைக்கு, முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 

    • திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளை.
    • எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செக் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்வர ராவ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள ஓங்கோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், மறுநாள் காலை பணிப்பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பணிப்பெண் வெங்கடேஷராவிடம் கூறியதை அடுத்து, அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்துக் கொண்டு பெண் வேடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களின் தனித்துவமான உடையின் காரணமாக "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர்கள் எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதில், 12 சவரன் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
    • இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

    இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

    காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
    • காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி விருதுநகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக கண்டெய்னர் லாரி ஒன்று நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே பஜாரில் நின்றவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ் சாலை ரோந்து போலீசார் வல்லநாடு மெயின் பஜாரில் இருந்த தடுப்பு வேலியை ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதற்கிடையில் லாரி கவிழ்ந்து விழுந்த காட்சிகள் அருகில் ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லி கொண்டான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றர் இவரது கடையும்,அதன் அருகே பியூட்டி பார்லர் மற்றும்செல்போன் சர்வீஸ் கீழே உள்ள முடி திருத்தகம் ஆகிய கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். இந்த சிசிடிவி காட்சி ஆனது தற்போது வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம்.கீழ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது சந்தேகம் படும்படியான ஒரு நபரை கூப்பிட்டு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் இதை எடுத்துஅவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 23) என்பதும் அவர் செல்போன் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை  ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில்பாரதியார் தெருவில் உள்ள பர்கர் கடையில் பூட்டை உடைத்து அங்குள்ள பர்கர் மற்றும் தின்பண்டங்களை தின்று அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.இது எடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் பர்கர் கடையில் பூட்டை உடைத்து கடையில் தின்பண்ட ங்களை ஆராய்ந்து தின்று சாவகசமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

    ×