என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரகம்"

    • அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்

    அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. அப்போது மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் உயிர் பிழைத்தார்.

    ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. ஆகவே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

    ஆனாலும் டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்.

    அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.

    நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இது தொடர்பாக பேசிய, மருத்துவர் டாட்சுவோ கவாய், "பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்" என்றும் கூறியுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

    • சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
    • சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது.

    சரியான சிறுநீரக உணவுக்கு டயாலிசிஸ் நோயாளியின் திரவ உட்கொள்ளல் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். உடலில் அதிக அளவு திரவங்கள் எடை அதிகரிப்பு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். நுரையீரலில் அதிகப்படியான திரவம் குவிந்தால், நோயாளி சுவாசிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார் மற்றும் பிற இதய பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும்.

    டயாலிசிஸ் சிறுநீரகத்தின் போது கூடுதல் திரவங்கள் அகற்றப்பட்டாலும், ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பாதுகாப்பாக அகற்றப்படும். திரவங்களின் அளவு அதிகமாக இருந்தால், டயாலிசிஸ் நோயாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியும் பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கும்.

    ஒரு நோயாளியின் திரவ உட்கொள்ளலைக் கண்காணிக்கும் போது, அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் பொருள் திரவமாக மட்டும் கணக்கிடப்படுவதில்லை, ஆனால் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சில காய்கறிகள் மற்றும் பழங்களில் திரவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றும் அவற்றின் செய்முறையில் திரவத்தை உள்ளடக்கிய உணவுப் பொருட்களும் திரவ நுகர்வில் சேர்க்கப்படும்.


    டயாலிசிஸின் பக்க விளைவுகளில் ஒன்று, செயல்முறையின் போது ஒரு குறிப்பிட்ட அளவு புரதம் இழக்கப்படுகிறது. எனவே, இழப்பை ஈடுசெய்ய அதிக புரத உட்கொள்ளல் அவசியம். உடலில் புரதச் சத்து குறைவதால் உடல் எடை குறைவதோடு, கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் உடலின் திறனையும் குறைக்கலாம்.

    உயர்தர புரதப் பொருட்களில் சில... கோழிப் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு.

    டயாலிசிஸ் நோயாளிக்கு குறைந்த உப்பு நுகர்வு எப்போதும் ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் உப்பு உட்கொள்வது ஒரு நபருக்கு தாகத்தை உண்டாக்கும் மற்றும் இறுதியில் அதிகப்படியான திரவ நுகர்வுக்கு வழிவகுக்கும்.

    சோடியம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த, சமைக்கும் போது முழு மசாலா மற்றும் புதிய மூலிகைகள் பயன்படுத்த வேண்டும் மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு, பாட்டில் கோழி சாறு மற்றும் அதிக அளவு சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு, அதாவது ஒவ்வொரு சேவையிலும் 250 கிராமுக்கு மேல்.

    சமைக்கும் போது குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்த வேண்டும் அல்லது எதுவும் பயன்படுத்தக்கூடாது. உணவுக்கு ஒரு சுவையை கொடுக்க, சுண்ணாம்பு மற்றும் வினிகர் சிறந்த விருப்பங்கள்.

    பருப்பு, கோகோ பானங்கள், கோலா பானங்கள், பீர், பீன்ஸ் மற்றும் நட்ஸ் போன்ற பாஸ்பரஸ் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது டயாலிசிஸ் நோயாளியின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டயாலிசிஸ் உடலில் இருந்து பாஸ்பரஸை அகற்றாது, இது இறுதியில் இரத்தத்தில் சேருகிறது, இதன் விளைவாக எலும்புகள் கால்சியத்தை வெளியிடத் தொடங்குகின்றன, இதன் விளைவாக எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். எனவே, இரத்தத்தில் உள்ள இந்த பாஸ்பரஸ் இதயம், மூட்டுகள், இரத்தம் மற்றும் தசைகளில் கால்சியம்-பாஸ்பரஸ் படிகங்களை உருவாக்குகிறது, இது நிலையான வலி, இரத்த ஓட்டத்தில் சிக்கல்கள், கண்ணில் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

    நோயாளிகள் உண்ணும் உணவில் இருந்து பாஸ்பரஸ் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த பாஸ்பேட் பைண்டர்களை உட்கொள்ள வேண்டும். சிறுநீரக நிபுணர் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப பாஸ்பேட் பைண்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார்.


    டயாலிசிஸ் சிகிச்சை பெற்றவர்கள் தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மற்றும் பன்றி இறைச்சி போன்ற அதிக பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது, இது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை உயர்த்துகிறது.

    இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் தசைகளை வலுவிழக்கச் செய்யலாம் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பை ஏற்படுத்தும், இது தீவிர நிகழ்வுகளில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

    சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் மூலம் தேவையான அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைப் பெற முடியும், ஆனால் அந்தந்த சுகாதார நிபுணரின் பரிந்துரையின் கீழ் மட்டுமே.

    • உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
    • அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும்.

    சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகத்தின் செயலிழப்பு கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

    சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் ரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். 

    சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

    * தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்சனைகளுக்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம்.

    * அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும். சிறுநீரகம் சரியாக வேலை செய்யாதவர்களுக்கும் அசைவ உணவு கொடுக்க கூடாது.

    * சிறுநீரகம் தொடர்பாக வரும் நோயை தடுப்பது கடினம். சிறுநீரக பிரச்சனை இந்த ஒரு காரணத்தால் தான் வருகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மரபு காரணமாகவும், வயது காரணமாகவும் சிறுநீரக பிரச்சனை வருகிறது.

    * சிறுநீரகம் தொடர்பாக உண்டாகும் நோய்களை தவிர்க்க உடல் பரிசோதனை, 50 வயதிற்கு மேல் ரத்த பரிசோதனை, பிஎஸ்ஏ சோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதால் ஆரம்ப காலத்திலேயே புராஸ்டேட் வீக்கத்தை கண்டுபிடிக்கலாம். புராஸ்டேட் வீக்கத்தால் வரும் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
    • நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் மட்டுமே நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட எந்திரங்களின் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

    ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது. மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.

    மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும். மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன. தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

    உயிரைப் பறிப்பது எப்படி?

    கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.

    மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் குறிப்பிட்ட தர நிா்ணயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அதில் மெத்தனால் இருக்காது.

    ஆனால், சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் தயாரிக்கும்போது நொதி நிலையில் மெத்தனால் உருவாகக்கூடும். பொதுவாக ஒருவா் அருந்தும் சாராயத்தின் அளவில் 10 மில்லி லிட்டர் மெத்தனால் இருந்தாலே பாா்வை பறிபோய்விடும். அதுவே 40 மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-ல் இருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.

    வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பாா்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது 'பாா்மால்டிஹைட்' என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னா் அது 'பாமிக்' அமிலாக மாறும்.

    இந்த வகையான அமிலம்தான் 'பாா்மாலின்' எனப்படும் திரவமாக மாற்றப்பட்டு இறந்தவா்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் 'பாமிக்' அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாா்வை இழப்பு ஏற்படும்.

    அதன் தொடா்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னா் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.

    இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றி விடலாம். ஆனாலும், எதிா்விளைவுகளாக பாா்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.

    எனவே மெத்தனால் கலந்த சாராயம் குடித்தவர்கள் வாழ்நாள் முழுக்க நோயுடன் போராடும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    • உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
    • கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,

    • சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை

    • இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.

    • பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம்.

    • மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .

    • மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது .

    • தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .

    • சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது.

    • கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,

    • சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .

    • இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் .

    • இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள்.

    • தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.

    • சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது .

    • மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது.

    • ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

    • அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

    • தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார ஆகியவற்றை கூறி சம்மதிக்க வைத்தார்.
    • பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து கணவன் அங்கு சென்றுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் கணவன் சிறுநீரகத்தை விற்று பணத்துடன் காதலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் பகுதியில் வசித்துவரும் பெண், வீட்டின் நிதிசூழலை காரணம் காட்டி தந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    மகளுக்கு 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு விஷயங்களை கூறி கணவனுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

    சுமார் ஒரு வருடமாக சிறுநீரகத்தை வாங்குபவரை தேடிய கணவன், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றார். அதன்பின் அந்த பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கணவன்பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

    பலமுறை முயற்சித்தபின் கடைசியாக மனைவி கதவை திறந்து அங்கிருந்து போகுமாறும் விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன் எனவும் கூறி கணவனை துரத்தியுள்ளார். மனமுடைந்த கணவன் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய விஞ்ஞானி தேவேந்திர பார்லேவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி பரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 47 வயதான அவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    2011-ம் ஆண்டு அவரது முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அவரது தாயாரிடம் இருந்து வந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே வேலை செய்ய முடிந்தது. இரண்டாவது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை 2012-ம் ஆண்டு நடந்தது.

    பின்னர் 2022-ம் ஆண்டு பார்லேவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து அவருக்கு சிறுநீரகம் தானம் கிடைத்தது.

    அதன்படி கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது உடலில் நான்கு செயல்படாத சிறுநீரகங்கள் இருந்ததால் அறுவை சிகிச்சை சவாலாக இருந்துள்ளது.

    பின்னர் 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. அதன்பிறகு தொடர் சிகிச்சை மூலமாக குணமடைந்து 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    ×