search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிக்கு திருமணம்"

    • பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே படந் தால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 2பேரும் பெற்றோ ருக்கு தெரியாமல் அங் குள்ள வீரசின்னம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சிறுமி வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் மகளிர் ஊர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரணை நடத்தியதில் 15 வயது பெண்ணுக்கு திரு மணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் கருப்பசாமி மீது குழந்தைகள் திருமணச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புகளூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்கள்
    • தடுத்து நிறுத்திய குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் அருகே 17 வயது உள்ள சிறுமிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதை அறிந்த, பலர் அந்த சிறுமியை பெண் பார்த்து வந்துள்ளனர். இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் கரூரில் உள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


    • அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
    • அந்த சிறுமி மீட்கப்பட்டு தருமபுரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 25) தொழிலாளி. இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி சைல்டு லைன் உறுப்பினர் ஆனந்தி, மகளிர் ஊர் நல அலுவலர் மலர்கொடி ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை திருமணம் செய்து கொண்ட ரவி, இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய பெற்றோர் முருகன் (50), மூக்கம்மாள் (45), சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த சிறுமி மீட்கப்பட்டு தருமபுரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(28). ஆட்டோ டிரைவர். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தார்.

    • சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார்.
    • குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். பண்ருட்டி அருகே கவரப்பட்டு ஹவுசிங் போர்டு சுந்தரமூர்த்தி. இவருக்கும்,மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. எனவே சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார். இது பற்றி சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் ராணி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாமியார் மீனா, மருமகன் சுந்தரமூர்த்திஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சுபஸ்ரீ மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  

    ×