search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வீழ்ச்சிகள்"

    • கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி, புதர்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் தொடர்வதால் நீர் நிலைகளும் வறண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச் சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படுவதால் இதனை காண வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த அருவிப்பகுதிகளில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயமும் பாதிப்பு அடைய தொடங்கி உள்ளது. மேலும் மலைக் காய்கறிகளில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    இதேபோல் வனப்பகுதியிலும் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள், பறவைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுவதால் பாதிப்பு உண்டாகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே இரவு முதல் காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது இடைவிடாது பலத்த மழை பொழிவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி கடும் குளிரில் வரிசையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

    தொடர் மழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டுகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 61,403 பேர் தரிசனம் செய்தனர். 19,126 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
    • இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    சேலம்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெய்து மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    மாவட்டத்தில் இன்று காலையும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தம்மம்பட்டி, மேட்டூர், கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வீரகனூர் - 23, சங்ககிரி - 16.3, ஏற்காடு - 12.6, ஆத்தூர்-9, ஆனைமடுவு - 9, கரிய கோவில் - 5, பெத்தநாயக்கன்பாளையம் - 5, செங்கவல்லி - 5, மேட்டூர் -4.4, தம்மம்பட்டி - 4, எடப்பாடி - 3, கடையாம்பட்டி - 3, சேலம்- 2.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ×