என் மலர்
நீங்கள் தேடியது "சையத் முஷ்டாக் அலி கோப்பை"
- கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஈடன் கார்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இமாசல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏகாந்த் சென் 37 ரன்னும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல்முறையாக மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.
- முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ராஞ்சி:
16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.
அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோதின.
- இதில் பரோடா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான தமிழ்நாடு அணியும் குர்ணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 30 பந்தில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங்கை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்த போட்டியில் குர்ஜப்னீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர் 1 பவுண்டரி விளாசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஓவரை பறக்க விட்ட மும்பை கேப்டன் என சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் விஜய் ஷங்கர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மும்பை - சிஎஸ்கே என்ற போட்டி ஆரம்பித்து விட்டது.
- பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் விளையாடிய பரோடா 349 ரன்கள் குவித்தது
- சிக்கிம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்தது.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பரோடா- சிக்கிம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 51 பந்தில் 15 சிக்ஸ், 5 பவுண்டரியுடன் 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிக்கிம் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
- மும்பை அணியில் ரகானே 84 ரன்கள் குவித்தார்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பரோடா - பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய பெங்கால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பரோடா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்ற காலிறுதி ஆட்டத்தில் விதர்பா - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதர்வ தைடே, வான்கடே ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணியில் ரகானே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 45 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 224 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரகானே தட்டிச்சென்றார்.
இதன் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதிக்கு 3-வது அணியாக மும்பை முன்னேறி உள்ளது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - உத்தர பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 4-வது அணியாக இடம் பெறும்.
- முதலில் ஆடிய பரோடா அணி 158 ரன்கள் எடுத்தது.
- மும்பை தரப்பில் ரகானே 11 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
பெங்களூரு:
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பரோடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிய ரகானே அரைசதம் விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 46 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ரகானே 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 5 சிக்சர் என 98 ரன்கள் விளாசினார்.
இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் 2-வது அரைஇறுதியில் டெல்லி- மத்தியபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன.
- முதலில் விளையாடிய டெல்லி அணி 146 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய படிதார் 29 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து மத்திய பிரதேசத்தின் தொடக்க வீரர் அர்பித் கவுட் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேனாபதி 7 ரன்னிலும் ஹர்ஷ் கவ்லி 30 ரன்னில் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ஹர்பிரீத் சிங் பாட்டியா- ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி படிதார் அரை சதம் விளாசினார்.
இறுதியில் 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மத்திய பிரதேசம் அணி இறுதிப் போட்டியில் மும்பையை வருகிற 15-ந் தேதி எதிர் கொள்கிறது.
- மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.
- மும்பை அணி 17.5 ஓவர்களில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 48 ரன்களும் ரஹானே 37 ரன்களும் அடித்தனர்.