search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்றுகள்"

    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் முழு மானியத்தில் குழித்தட்டு மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
    • இணையதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.

    இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற இைணயதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    • கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை அடுத்த மருங்குளத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் , விவசாயிகளுக்கு மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறும் போது:-

    விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 10.5 லட்சம் எண்ணிக்கையில் கத்தரி நாற்றுகள், 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லி, எலுமிச்சை போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    • சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.
    • பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

     குண்டடம், நவ.23-

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.

    இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூர் வெடித்த பயிரினை கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
    • நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம்.

    திருவாரூர்:

    மழையிலிருந்து சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து ள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூழ் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் நாற்றாங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

    தூர் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் இரகங்களை நடலாம். அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

    நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

    போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பாக்டீரியா இலைக்கருகில் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பெட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

    நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி
    வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.
    • புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறை–களான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுவதை தவிர்க்கலாம்.

    காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சட்டி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம். 1 முதல் 3 வயது உள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

    வாழைத்தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிகள் செய்ய வேண்டும். வாழை தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். நிழல் வலை குடிலின் குழிதட்டில் தயார் செய்யப்பட்டுள்ள நாற்றுகள் அதிகப்படியான மழை நீரால் பாதிப்படையாமல் இருக்க நெகிழித்தாள்கள் கொண்டு நாற்றுகளை மூடி பாதுகாக்கலாம்.

    காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் எதிர் திசையில் கயிறு , கழிகள் மூலம் முட்டு கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்கு பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தை சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழு உரம் இடவேண்டும். பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உயிர் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×