என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலாவதி"
- வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
- குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.
குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.
அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.
வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
- மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.
திருப்பூர்:
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கே.செட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக செயலாளரை நியமிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 3 யானைகளுக்கு வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி விட்டது.
- தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகள் பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 3 கோவில் யானைகளின் நிலை, உரிமை சான்றிதழ் ஆகிவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட வனத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு மதுரை மாவட்ட வனத்துறை பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பார்வதி (மீனாட்சி அம்மன் கோவில்), தெய்வானை (திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில்), சுந்தரவல்லி (கள்ளழகர் கோவில்) உள்பட 7 யானைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம்-2011-ன் படி வனத்துறை உரிமை சான்றிதழ் வழங்கி வருகிறது. இதில் யானையின் எடை, வயது, பெயர், உயரம், உடல்நிலை, புகைப்படம் உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் இந்த சான்றிதழ், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 3 கோவில் யானைகள் விஷயத்தில் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அது கோவில் யானைகள் பராமரிப்பில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுச்சேரி யானை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள், உரிய சான்றிதழின்றி உள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
- பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
கன்னியாகுமரி:
கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.
உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.
உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.
கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.
தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்