search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலிக்காய்ச்சல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின.
    • இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.

    மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது. மேலும் எலிக்காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.
    • காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவ மழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன. அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.

    மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எலி காய்ச்சலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற வாலிபர் இறந்திருந்த நிலையில் தற்போது ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் எலி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.

    குருவாயூர் அருகே உள்ள மம்மியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ஜார்ஜ்(வயது62). கோட்டப்பாடி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த வாரம் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    • காய்ச்சல் குணமாகாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் வனிதா அனுமதிக்கப்பட்டார்.
    • வனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதை அறிந்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரொசாரியோ (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனிதா (22), இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.

    வனிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த 24-ந்தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட அன்னூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வனிதாவும், அவரது கணவரும் சென்றனர். பின்னர் பண்டிகையை கொண்டாடி விட்டு ஊருக்கு வந்த வனிதாவிற்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    காய்ச்சல் குணமாகாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் வனிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதை அறிந்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வனிதா பலியானார்.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வனிதா வசித்த பணிக்கம்பட்டி கிராமம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. புரவிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது. அங்கு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தண்ணீரின் தூய்மைத்தன்மை அறிய குடிநீரும் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. வனிதா கேரளா உள்பட பல இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து எலிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதுபற்றியும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×