என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவன் கோவில்கள்"
- சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரதோஷம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோல வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கோவில் உள்பிரகாரத்தில் சுவாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
சிவகிரி:
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருநீலகண்ட சுவாமி - சமேத மீனாட்சியம்மன் கோவில், கருணையானந்தா சித்தர் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில், நாதகிரி முருகன் கோவில், விஸ்வை அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலை திரிபுரநா தேஸ்வரர் சுவாமி - சிவபரிபூரணி அம்மன் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவில், தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் கோவில், சிவகிரி அருகே சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆனி மாதம் சனி மகா பிர தோஷ பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு காட்சி
சுவாமிகள் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுத்தருளி கோவில் உள்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பரத்துக்கு முன்பாக தேவாரம் பக்திப் பாடல்கள் குழுவை சேர்ந்த குழுவினர் தேவார பக்தி பாடல்கள் பாடியபடி நூற்றுக்கணக்கான பெண்களுடன் முன்னே செல்ல சப்பரம் பின்னால் தொடர்ந்து வந்தது.
தீபாராதனை
பின்னர் சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு வெல்லம் அரிசி, பஞ்சாமிர்தம், புளி யோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், தயிர்சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
- சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதன்படி பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
இதே போல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை வழிபட்டனர்.
- அனைத்து சுவாமிகளுக்கும் 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வழிபாட்டு குழுவினர் கோவில்களில் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.
சிவகிரி:
தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பழைய போலீஸ் நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள திருநீலகண்ட சுவாமி சமேத மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது.
அபிஷேகம்
முன்னதாக கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் போன்ற 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வழிபாட்டு குழுவினர் சரஸ்வதி, தேவி, மீனா, குழந்தை நாச்சியார் ஆகியோர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.
கோவிலில் பிரதோஷ நாயகர், சுவாமி-அம்மன் ஆகியோர் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்புற பிரகாரத்தில் பெண்கள் தேவாரப் பாடல்கள் பாடிக் கொண்டே முன்னே செல்ல சப்பரம் பின்னாலேயே வலம் வந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பயறு, பால் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.
சிவகிரி
இதனைப் போன்று சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கருணையானந்தா சித்தர் சுவாமிகள் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலையில் அமைந்துள்ள திரிபுர நாதேஸ்வரர் - சிவபரிபூரணி அம்மன் கோவில்,
சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ராமநாதபுரத்தில் சுயம்பு லிங்க சுவாமி கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில் போன்ற கோவில்களில் வழிபாட்டு குழுவினர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.
தொடர்ந்து வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், பஞ்சாமிர்தம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை சனிபிரதோ ஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
மதுரை
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்