search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்"

    • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை கள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
    • தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணை களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளவான 25 அடியை எட்டி உள்ளது. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.

    48 அடி ெகாள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.26 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 70.90 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 445 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தக்கலை:

    தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

    • மழையினால் நேற்று ஒரே நாளில் 3800 பேர் பார்த்தனர்.
    • சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் சீசன் காலங்களிலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால தொடர்விடுமுறை நாட்களிலும் வழக்கத்தை விட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும், மிலாடி நபி விடுமுறை நாளான கடந்த மாதம் 28-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி யான கடந்த 2-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்ப தால் கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.

    தொடர் விடுமுறையை யொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 3-ந்தேதி வரை 6 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 37 ஆயிரத்து 660 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வை யிட்டு வந்து உள்ளனர். மழையின் காரணமாக நேற்று விடுமுறை விடப்பட்டி ருந்தாலும் 3,800 பேர் மட்டுமே விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக நிறுவனத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது. மேலடுக்கு காற்று சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் இந்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் படிப்படியாக குறைந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கோடை மழை தொடங்கியது. சுமார் 6 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் லேசான அடை மழை தொடர்ந்து பெய்ததால், வெப்பநிலை முற்றிலம் மாறி குளிர் காற்று வீச தொடங்கியது

    இன்று அதிகாலை 5 மணி முதல் வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்து வருகிறது. லேசான அடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் குளிரான சீதோஷ்னம் தொடர்ந்து நிலவி வருகிறது. பொதுமக்கள் கையில் குடையுடன் நடனமாடி வருகின்றனர். நேற்று மாலை பெய்த கனமழையால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு-

    எருமப்பட்டி 3 மி.மீ., குமாரபாளையம் 5.40 மி.மீ., மங்களபுரம் 5.80 மி.மீ., மோகனூர் 8 மி.மீ., நாமக்கல் 28 மி.மீ., பரமத்தி வேலூர் 16 மி.மீ., புதுச்சத்திரம் 20 மி.மீ., ராசிபுரம் 22 மி.மீ., சேந்தமங்கலம் 7 மி.மீ., திருச்செங்கோடு 8 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 33.5 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • கரூர் பகுதியில் தொடர் ஆடு திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    கரூர்:

    கரூர் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் ஐந்து முதல் 10 ஆடுகள் வரை வளர்த்து விவசாயம் சார்ந்த தொழிலாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் திருமாநிலையூர் அருகே ஆடு வளர்க்கும் பொதுமக்கள், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை, பக்கத்து பகுதியில் வசிப்பவர்கள் கார் மற்றும் ஆட்டோகளில் வந்து ஆடுகளை திருடிச் செல்வதாக தெரிகிறது. இதுகுறித்து திருமாநிலையூர் பகுதி பொது மக்கள் தாந்தோணிமலை போலீசாரிடம் ஆடு திருடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தான்தோன்றிமலை போலீசார் சந்தேகப் பட்டு 2 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    • சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.

    இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது.
    • மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளி பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம் , வசந்தபுரம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு வகையான பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    காலை முதலே மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார். 

    ×