search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் வியாபாரி"

    • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அம்மாண்டிவிளை சாந்தான் விளை பகுதியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34). தேங்காய்வியாபாரி. இவர் தற்பொழுது நாகர்கோவில் செட்டிகுளம் கணபதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கவியரசு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவியரசு வீட்டிற்குள் சென்று பார்த்தார்.அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் துணிப்பையில் கட்டி போடப்பட்டிருந்த 15 பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ 7 லட்சம் ஆகும். இதுகுறித்து கவியரசு கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.கவியரசு வீட்டிலிருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது .இந்த நிலையில் வீட்டை உடைத்தும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் .அடுத்தடுத்து நடந்து வரும் இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×