என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின் கம்பங்கள்"
- பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது
- மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன.
பல்லடம்:
பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறில் மழையினால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அங்கு நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கூறுகையில், மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது கான்கிரீட் கலவை போட்டு அமைக்க வேண்டும். நேற்று பெய்த மழையினால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் மின்கம்பம் அருகே இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உப்பாறு அணையில் 84 மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- 4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மின் பகிர்மான வட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெவ்வேறு பகுதிகளில் செல்லும் உயர அழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் 3,210 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 61 பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பங்கள், 119 பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பங்கள், 174 சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன.
இது தவிர 200 பகுதி களில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் சரி செய்து, 23 தாழ்வான உயர் அழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட மின்கம்பங்கள், 44 தாழ்வாக உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட பின் கம்பங்கள், 250 பழுதடைந்த இழுவை கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 292 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 17 பகுதிகளில் கண்டறி யப்பட்ட பழுதடைந்த மின் புதைவடை பெட்டி சரி செய்யப்பட்டுள்ளன.
592 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதான ஜம்பர் ஒயர் மாற்றப்பட்டுள்ளன. 140 மின் மாற்றி களில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சீரமைக்கப்பட்டன.
மேலும் 513 மின் மாற்றி களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 128 மில் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரிபார்க்க ப்பட்டுள்ளது.
4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன. 39 பகுதிகளில் கண்டறியப்பட்ட வெளியில் தெரியும் நிலையில் இருந்த புதைவட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பித்து 30 நாளுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு சேவை குறைபாடுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தாராபுரம் :
மின் நுகர்வோருக்கு தடையில்லா மின் சப்ளை வழங்குவதுடன் மின் நுகர்வோரின் தேவைகள், குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சில வழி காட்டு தல்களை நிர்ண யித்துள்ளது.அதன்படி விண்ணப்பித்து 30 நாளுக்கு ள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்ற சேவைகளுக்கு ஒரு நாள் தாமதத்துக்கு 100 ரூபாய் வீதம், அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மின்தடை ஏற்பட்டு குறிப்பிட்ட நேர த்துக்குள் இணைப்பு வழங்கப்பட வில்லை யெனில், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் 50 ரூபாய் வீதம், அதிகபட்சம் 2,000 ரூபாய், மின்னழுத்த புகாருக்கு 250 ரூபாய் என ஒவ்வொரு சேவை குறை பாடுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இத்தகைய விதி கடந்த 2004 செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. 19 ஆண்டுகளான நிலையில், பலமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இழப்பீடு தொகை உயர்த்தப்படவில்லை.மின்வாரிய சேவை தாமத த்துக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பி னர் வலியுறுத்தி வருகின்ற னர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சமீப ஆண்டுகளாக மின் நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோரின் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. பெரிய ளவிலான தொழில்நுட்ப பிரச்னைகள் தவிர உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டி ய பிரச்னை கள், உடனடியாக சரி செய்யப்படு கிறது.
தற்போது பொதுவான வாட்ஸ் ஆப் எண் வாயிலாக புகார் கூறும் நடைமுறை அமலில் இருப்பதால் மின் நுகர்வோர் தங்களின் புகார்களை உடனுக்குடன் மின் வாரியத்தின் கவனத்து க்கு கொண்டு செல்லவும், உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வும் முடிகிறது. சேவை தாமத த்தால் நுகர்வோருக்கு அபராதம் செலுத்தும் சூழல் இல்லை.
பழுதான மின் கம்பங்க ளும் அவ்வப்போது மாற்ற ப்பட்டு வருகின்றன. பொது தேர்வு சமயமாக இருப்பதால் தடையற்ற மின் சேவையை வழங்கும் நோக்கில் புதிய மின் கம்பங்களை மாற்றி யமைக்கும் பணி நடத்தப்பட வில்லை. மே மாதம் முதல் மீண்டும் பழுதான மின் கம்பங்களை மாற்றிய மைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறி னர்.
- தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் கம்பங்களுக்கு அருகே சிமென்ட் மேடை அமைத்து அதில் தற்காலிகமாக மின்மாற்றியை பொருத்தினர்.
இந்நிலையில் தற்போது மின் கம்பங்களில் கம்பிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்கின்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
- ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அருகே உள்ள கோவிந்தப்ப நகரில் இரண்டு வீடுகளில் உள்ளே மின்கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் கம்பிகளில் மின்சாரம் செல்கிறது தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
இதனால் அந்த வீட்டின் உள்ளே வசிப்பவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மின்கம்பங்களை அகற்றக்கோரி பல ஆண்டுகளாக அந்த வீட்டில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கும் மின் கம்பங்களை அகற்றக்கோரி குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தத்திடம் நேற்று கோரிக்கை வைத்தனர்.
இவரைத் தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள்எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை உள்ளிட்டோர் நேற்று கோவிந்தப்பன் நகரில் வீடுகளுக்குள் உள்ள மின்கம்பங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கூறுகையில்:-
வீடுகளுக்குள்ளே மின்கம்பங்கள் இருப்பது குறித்து மின்சார மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நீண்ட நாள் பிரச்சனையான வீடுகளுக்குள்ளே இருக்கும் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரகாசம், மஞ்சுநாதன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
- சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை.
பல்லடம் :
பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில், சுமார் ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளின் மத்தியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் கம்பங்கள் வைக்கப்பட்டு விளக்குகள் ஒளிர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் விபத்துகளும் நேரிடுகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து கழற்றப்பட்ட மின்கம்பங்களை மாட்டி அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
- மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் பகுதியில் விவசாய தொழிலாளி ஒருவர் தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்க சென்றபோது மின் கம்பியில் குச்சி பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில் மின்கம்பங்களின் அருகே செல்லும்போது கவனமுடன் செயல்பட மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு ) திருஞானசம்பந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசி பாளையத்தில் கடந்த 27 ந்தேதி அன்று, தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்கச் சென்றபோது மின் கம்பிகளில், அந்த குச்சி பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். எனவே இத்தகைய மின்விபத்துகளை தவிர்க்க விவசாயிகள், மின் கம்பிகள் அருகே செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் கட்டடங்கள் கட்டும் போதும் இருக்கும் கட்டடங்களை விஸ்தரிக்கும் போதும் மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
- திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் எனும் குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அதில் ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்து குளத்திற்குள் விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டும் இந்த குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பிய வேலையில் திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது குளத்திற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது எஞ்சிய மின்கம்பங்களும் சாயும் தருவாயிலேயே உள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த குளத்திற்கு தண்ணீர் வர இருப்பதால் அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்